என்ன செய்யறதுனு எனக்கு நல்லா தெரியும்.. பின்வாங்குற பேச்சுக்கே இடமில்லை – ரோகித் சர்மா முடிவு

0
122
Rohit

இன்று இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் இலங்கை அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது பெரிய மாற்றம் இருக்குமா? என்று கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் முன்வைத்த காலை பின் வைப்பதில்லை என ரோகித் சர்மா மற்றும் கம்பீர் முடிவு செய்திருக்கிறார்கள்.

முதல் போட்டி டை ஆன காரணத்தினால் இந்திய அணி அடுத்த இரண்டு போட்டிகளையும் வெல்ல வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. இன்றைய போட்டியில் இந்திய அணி வெல்ல வேண்டியது மிக மிக முக்கியம்.

- Advertisement -

இந்த நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸில் இந்த முறையும் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இலங்கை அணியில் ஹசரங்கா மற்றும் முகமது சிராஸ் இருவரும் இடம்பெறவில்லை. அவர்களுடைய இடத்தில் கமிந்து மெண்டிஸ் மற்றும் வான்டர்சே இருவரும் இடம் பெறுகிறார்கள்.

இந்திய அணியின் தரப்பில் முதல் போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் இந்த போட்டியிலும் விளையாடுகிறார்கள். கம்பீர் மற்றும் ரோகித் சர்மா கூட்டணி இரண்டாவது போட்டியில் எந்தவித மாற்றத்தையும் செய்ய விரும்பவில்லை. சிவம் துபே அல்லது வாஷிங்டன் சுந்தர் இடத்தில் ரியான் பராக் இடம் பெறலாம் என்று எதிர்பார்த்த நிலையில் மாற்றங்கள் இல்லாமல் இந்திய அணி களம் இறங்குகிறது.

- Advertisement -

மேலும் இன்றைய போட்டிக்கான ஆடுகளமும் முதல் போட்டி போலவேதான் இருக்கும். இதன் காரணமாகவே இலங்கை அணி ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளரை மட்டுமே வைத்து களம் இறங்குகிறது. ஆடுகளம் பெரிய அளவில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பது போட்டிக்கு முன்பாகவே தெரிந்து விட்டது.

இதையும் படிங்க : தமிழ்நாட்டுக்கு வரும் கான் பிரதர்ஸ் .. கேப்டனாக அண்ணன் சர்ப்ராஸ் கான்..  தம்பி முஷீர் கானுக்கும் வாய்ப்பு

இந்த நிலையில் டாஸ் நிகழ்வுக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா “பரவாயில்லை. டாஸ் தோற்று சேஸ் செய்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று எங்களுக்கு தெரியும். நீங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியான மனநிலையுடன் சென்று விளையாட முடியாது. கண்டிஷனுக்கு தகுந்தது போல் அதே சமயத்தில் சுதந்திரமாக விளையாட வேண்டும். அணியாக நாங்கள் செய்ய விரும்பும் விஷயம் இதுதான். அதே பிளேயிங் லெவன் உடன் விளையாடுகிறோம். கடைசி ஆட்டத்தில் வெல்ல முடியவில்லை என்பது குறித்து கவலைப்படவில்லை. இரண்டு அணிகளும் சிறப்பாக செயல்பட்டதால் அந்த முடிவு வந்தது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -