உண்மைய சொல்றேன்.. டி20 பைனல்ல ஜெயிக்க.. நான்தான் பொய்யா நடிச்சு அத பண்ண சொன்னேன் – ரிஷப் பண்ட் பேட்டி

0
3608

2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணி சமீபத்தில் ரோகித் சர்மா தலைமையில் டி20 உலக கோப்பையை வெற்றி பெற்று இரண்டாவது முறையாக வரலாறு படைத்தது.

தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறும் சூழ்நிலையில் இருந்த போது இந்திய அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் முழங்காலில் காயம் ஏற்பட்டது போல நடித்து ஆட்டத்தின் வேகத்தை மாற்றியது குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் செய்த செயல்

சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் வெற்றிகரமாக அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாடியது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து விட்டு முடித்த பின்னர் அதற்குப் பிறகு களம் இறங்கிய தென்னாபிரிக்கா ஆட்டத்தின் மிடில் வரிசையில் முழுவதுமாக தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தது.

24 பந்துகளுக்கு 26 ரன்கள் மட்டுமே தேவை என்று இருந்த நிலையில் ரிஷப் பண்ட் ஆட்டத்தினை திசை திருப்ப சிறிது நேர அவகாசம் எடுத்துக் கொண்டார். முழங்காலில் காயம் என்று கூறி இந்திய அணியின் பிசியோ ஒருவரை அழைத்து சிகிச்சை எடுத்துக் கொள்வது போல நேரத்தை வீணாக்க, அது தென்னாப்பிரிக்காவின் கவனத்தை முற்றிலுமாக திருப்பி அதற்குப் பிறகு விக்கட்டுகளை இழந்து 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

பிசியோவிடம் நான் இதை கூறினேன்

இந்த நிகழ்வு குறித்து ரிஷப் பண்ட் பேசும்போது “நான் இது பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். ஏனென்றால் ஆட்டத்தின் வேகம் முற்றிலும் மாறியது. அதற்கு முன்னர் 2-3 ஓவர்கள் தென்னாப்பிரிக்க அணியால் குவிக்கப்பட்டன. எனவே இது போல மீண்டும் ஒரு உலகக் கோப்பை இறுதிப்போட்டி தருணம் எப்போது வரும் என்று நினைத்தேன். அதனால் நான் முழங்காலில் காயம் ஏற்பட்டது போல நடித்து அருகில் இருந்த பிசியோவை உங்களது நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள், நேரத்தை வீணடித்துக் கொண்டே இருங்கள் என்று கூறினேன்.

இதையும் படிங்க:ரூல்ஸ் புதுசா இருக்கலாம்.. ஆனா ஐபிஎல்ல ஒரு தடவை கூட நான் இப்படி செஞ்சது இல்ல – பேட் கம்மின்ஸ் பேட்டி

பிசியோ நான் நலமா என்று கேட்டுக் கொண்டே இருந்தார். ஆனால் நான் அவரிடம் எனக்கு ஒன்றும் இல்லை நான் காயம் ஏற்பட்டது போல நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினேன். இதுபோல நிகழ்வு அனைத்து நேரங்களிலும் வேலை செய்யும் என்று கூற முடியாது. ஆனால் சில நேரங்களில் இது வேலை செய்தால் உங்களுக்கு வேறு எதுவும் தேவையே இருக்காது” என்று கூறினார். ரிஷப் பண்ட் ஆட்டத்தின் வேகத்தை திசை திருப்ப சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த கிளாஸன் அதற்கு அடுத்த ஹர்திக் பாண்டியாவின் ஓவரில் ஆட்டம் இழந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -