ஐபிஎல் 2025 கிரிக்கெட் சீசன் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான விதிமுறைகள் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் சில நாட்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் ஐபிஎல் 2025 விதிமுறைகள் குறித்து ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரரான பேட் கம்மின்ஸ் தனது கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஐபிஎல்லில் அறிவிக்கப்பட்ட புதிய விதி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களில் சிலர் ஏலத்திற்கு பிறகு விளையாடாமல் தவிர்த்து வந்தனர். இதனால் ஐபிஎல் அணிகளுக்கு வீரர்கள் விளையாடதால் சிக்கல் ஏற்பட்ட நிலையில் இதனை சரி செய்யுமாறு ஐபிஎல் நிர்வாகத்திடம் தெரிவிக்கவே ஐபிஎல் நிர்வாகம் இதனை சரி செய்யும் விதமாக ஒரு அணி ஒரு வீரரை ஏலத்தில் எடுத்த பிறகு விளையாடாமல் வெளியேறினால், அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு விளையாட முடியாது என்று தடை விதித்தது.
இந்த விதி தற்போது ஐபிஎல் அணிகளால் வரவேற்கப்பட்ட நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன், ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக விளங்கும் பேட் கம்மின்ஸ் ஐபிஎல் ஏலத்திற்கு பிறகு நான் விளையாடாமல் ஒருபோதும் பின்வாங்கியதில்லை எனவும் தற்போது நடைபெற உள்ள டெஸ்ட் மற்றும் உலகக் கோப்பைகளை கருத்தில் கொண்டு அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவது குறித்து முடிவு செய்யப் போவதாக பேட் கம்மின்ஸ் கூறி இருக்கிறார்.
ஒருபோதும் பின்வாங்கியது இல்லை
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “அடுத்த சீசன் எப்படி இருக்க போகிறது என்பது குறித்து விரிவாக முடிவு செய்யப் போகிறேன். தற்போது அறிவிக்கப்பட்ட விதிகளில் சிறிய மாற்றங்கள் உள்ளன. ஆனால் கடந்த காலங்களில் அது என்னை பாதித்திருக்குமா என்று கேட்டால் தெரியாது. ஏலம் முடிந்த பிறகு நான் ஒருபோதும் விளையாடாமல் வெளியேறியவில்லை. ஆனால் ஐபிஎல் தொடருடன் டெஸ்ட் கிரிக்கெட் தான் முதலில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய தொடர்.
இதையும் படிங்க:நியூசி டெஸ்ட் சீரிஸ்.. 4 இளம் இந்திய ரிசர்வ் வீரர்கள் அறிவிப்பு.. அகர்கர் கம்பீர் அதிரடி
அதற்குப் பிறகு உலக கோப்பை தொடர்களும் இருப்பதால் அது ஒரு கூடாரமாக பயன்படுத்தப்படுகிறது என்று நினைக்கிறேன். இவற்றை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடர் குறித்து முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது” என்று கம்மின்ஸ் கூறி இருக்கிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக 20 கோடிக்கும் அதிகமாக வாங்கப்பட்ட நிலையில் ஒரு கேப்டனாக அணியை சிறப்பாக வழி நடத்தி இறுதிப்போட்டி வரை கொண்டு சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த முறையும் இவரை சன்ரைசர்ஸ் அணி தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.






