கடந்த இரண்டு தினங்களில் நடைபெற்ற ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை எடுத்து வலுவான அணிகளாக மாற்றி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்ச்சியாளரான ராகுல் டிராவிட் 13 வயது வீரர் வைபவ் சூரியவன்ஷியைத் தேர்வு செய்ததற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.
ஐபிஎல் மெகா ஏலம் 2025
18ஆவது ஐபிஎல் சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான மெகா ஏலம் கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை துபாயில் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை எடுத்து அணியை வலுவாக கட்டமைக்க ஏற்கனவே சிறந்த வீரர்களை தக்க வைத்திருந்த ராஜஸ்தான் அணி மேலும் வெளிநாடு உள்நாடு என சிறப்பான வீரர்களை எடுத்து அணியை வலுவாக கட்டமைத்தது.
இதில் யாரும் எதிர்பாராத விதமாக பீகாரைச் சேர்ந்த 13 வயதே ஆன வைபவ் ரகுவன்ஷி 1.10 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து மற்ற அணிகளை ஆச்சரியப்படுத்தியது. ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் ஏலத்தில் எடுக்கப்பட்ட இந்திய வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்திருக்கிறார். இவர் ஏற்கனவே தற்போது நடைபெற்ற முடிந்த யூத் டெஸ்ட் போட்டியில் 58 பந்துகளில் சதம் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் ராகுல் டிராவிட் இவரை எடுத்ததற்கான காரணம் குறித்து தற்போது கூறி இருக்கிறார்.
ராஜஸ்தான் அணியின் முக்கிய இலக்கு – ராகுல் டிராவிட்
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “வைபவ் சூரியவன்ஷி சில நல்ல திறமைகளை பெற்றுள்ளார் என்று நினைக்கிறேன். அதனால் அவர் மென்மேலும் உயர இது ஒரு நல்ல சூழலாக இருக்கும் என்று நினைத்தோம். வைபவ் இப்போதுதான் எங்கள் சோதனைக்குள் வந்தார். அவரைப் பார்த்ததில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் முக்கிய இந்திய வீரர்களை தக்க வைத்தோம்.
இதையும் படிங்க:நல்லவேல.. என் காலத்துல பும்ராவோட இந்த டெக்னிக்ல ஆடல.. நிம்மதியா இருக்கு – இங்கி மைக்கேல் ஆதர்டன் கருத்து
மேலும் இந்த ஏலத்திற்கு வந்த இலக்கு என்னவென்றால் திறமையான பந்துவீச்சாளர்களை வாங்குவதே எங்களது நோக்கமாக இருந்தது. எனவே எங்களது பணியை நாங்கள் சிறப்பாக செய்து முடித்தோம் என்று நினைக்கிறேன்” என்று டிராவிட் கூறியிருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முக்கிய வேகப்பந்துவீச்சாளரான ஆர்ச்சரை திரும்ப ஏலத்தில் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு விளையாடிய போல்ட் தற்போது மும்பை அணிக்குச் சென்றிருக்கும் நிலையில் ஆர்ச்சர் தற்போது ராஜஸ்தான் அணியில் இணைகிறார்.