விராட் கோலிகிட்ட இருந்து இந்த விஷயத்தை கத்துகிறேன்.. அவர் பக்கத்தில் இருந்தால் நீங்கள் இதை உணர்வீர்கள் – துருவ் ஜூரேல் பேட்டி

0
58

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரான துருவ் ஜூரேல் தற்போது யூபி டி20 லீக் தொடரில் விளையாட இருக்கிறார். அந்தத் தொடரில் கோரக்பூர் லைன்ஸ் அணியின் கேப்டனாக தலைமை தாங்கும் ஜூரேல் இந்திய ஜாம்பவான் விராட் கோலி குறித்து சில சுவாரசியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

மேலும் விராட் கோலியை போன்று தானும் இந்த விஷயத்தை செய்ய விரும்புவதாகவும் கூறியிருக்கிறார். யூபி டி20 லீக்கில் கோரக்பூர் அணியின் முதல் போட்டி வருகிற 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலி பல இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். கிரிக்கெட் வாழ்விலும் சரி, தனது சொந்த வாழ்விலும் சரி இரண்டையும் சரிசமமாக ஒரே தராசில் வைத்து செயல்படுகிறார். நேற்றோடு விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டிற்குள் அடியெடுத்து வைத்து 16 ஆண்டுகள் ஆகிறது.

இந்த நிலையில் இந்தியாவின் பல வீரர்கள் விராட் கோலி குறித்து இனிமையான தகவல்களை பகிர்ந்து வரும் நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிராக சமீபத்தில் அறிமுகமான இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரேல் விராட் கோலியை போன்று தானும் செயல்பட நான் விரும்புவதாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ஜூரேல் விரிவாக கூறும்போது “நான் எப்போதும் விராட் கோலியிடம் இருந்து கற்றுக் கொள்ள முயற்சிக்கிறேன். ஏனெனில் அவர் கிரிக்கெட்டில் ஒரு ஜாம்பவான் வீரர்.அதனால் அவர் எப்படி உருவாகினார், இதற்காக என்ன வேலைகள் செய்தார் என்பதை கற்றுக்கொள்கிறேன். எப்போதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்ள ஆர்வமாக இருப்பேன். விராட் கோலியை சுற்றி இருக்கும் போது எப்போதும் அவரிடம் கிரிக்கெட் குறித்த விஷயங்கள் மட்டுமே பேசுவேன்.

அப்போது அவரது தாக்கம் உங்களை சுற்றி இருப்பதாகவே உணர்வீர்கள். அப்படி இருக்கும்போது நாம் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைப்பதும் ஒரு நல்ல விஷயமாகும். விராட் கோலி கிரிக்கெட்டில் 15 வருடங்களாக விளையாடி ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அந்த விஷயம் எனக்கு மிகவும் ஊக்கம் அளிக்கிறது. எனவே நானும் அதை போன்று சிறப்பாக செயல்பட்டு அந்த விஷயத்தை கொண்டு வர முயற்சிக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:ஜஸ்ட் 4 ரன் 5 விக்கெட்.. மீண்டும் அயர்லாந்திடம் தோற்ற இலங்கை பெண்கள் அணி.. எல்லாம் உள்நாட்டில் மட்டும்தானா?

இந்தியாவின் வளரும் நட்சத்திரமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஜூரேல் மூன்று போட்டிகளில் விளையாடி 190 ரன்கள் குவித்தார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 90 ரன்கள் வரை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -