இந்திய கிரிக்கெட்

சிஎஸ்கே என்ன எடுக்கல.. ஆனா எனக்காக இத செஞ்சது சந்தோஷமா இருந்துச்சு – தீபக் சஹார் பேட்டி

ஐபிஎல் 2025 மெகா ஏலம் சமீபத்தில் நடைபெற்று முடிந்த நிலையில் அதில் கலந்து கொண்ட பத்து ஐபிஎல் அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை மெகா ஏலத்தில் எடுத்து அணியை வலுவாக கட்டமைத்தது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வாங்கப்பட்டிருக்கும் தீபக் சாகர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

ஐபிஎல் மெகா ஏலம்

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான மெகா ஏலம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பத்து ஐபிஎல் அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை முன்னரே தக்க வைத்திருந்தாலும் தற்போது நடைபெற்ற ஏலத்தில் சிறப்பான வீரர்களை வாங்கி அணியை வலுவாக கட்டமைத்தது. இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டுமே இதுவரை விளையாடி வந்த தீபக்சஹார் அடுத்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.

2018ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக தீபக் சஹார் விளையாடி வந்த நிலையில் 2018, 2021 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் அவர் விளையாடிய போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கோப்பைகளை கைப்பற்றியது. இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து முறை ஐபிஎல் கோப்பைகளை தோனி தலைமையில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் நடைபெற்ற மெகா ஏலத்தில் சகாரை திரும்ப வாங்க சிஎஸ்கே முயற்சித்தும் இறுதியாக மும்பை அணி 9.25 கோடி ரூபாய்க்கு தங்கள் அணிக்குள் இழுத்தது.இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே குறித்து தற்போது தீபக் சகார் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

நான் நினைத்தது நடக்கவில்லை

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனி எனக்கு ஆரம்பத்தில் இருந்தே உதவியாக இருந்தார். அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக திரும்ப விளையாட விரும்பினேன். ஆனால் மெகா ஏலத்தில் எனது பெயர் இரண்டாவது நாள் வந்ததால் சென்னை அணிக்கு திரும்புவது கடினம் என்பதை உணர்ந்தேன். சென்னை அணியிடம் 13 கோடி ரூபாய் மட்டுமே இருந்தது ஆனால் ஏலத்தில் 9 கோடி ரூபாய் வரை எனக்காக முயற்சி செய்தனர்.

இதையும் படிங்க:ஆஸி டெஸ்ட் எங்களுக்கு ஒரு பாடம்.. பும்ராவுக்கு எதிரா நாங்க இத செஞ்சே ஆகணும் – இங்கி மைக்கேல் வாகன் பேட்டி

கடந்த ஆண்டு எனது பெயர் முதலிலேயே வந்ததால் சென்னை அணிக்கு திரும்புவது எளிதாக இருந்தது. இப்போதும் நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். சென்னை அணியோடு தொடர்வேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது நடக்கவில்லை என்றாலும் அது குறித்து வருத்தம் இல்லை. இப்போது ஐந்து கோப்பைகளை வென்ற மற்றொரு அணிக்காக விளையாடுவேன். ஆனால் தோனியுடன் விளையாடுவதை தவறவிடுவேன். மும்பை இந்தியன்ஸ் சிறந்த அணி. எனவே அவர்களுடன் விளையாட ஆர்வமுடன் இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by