ஆஸி டெஸ்ட் எங்களுக்கு ஒரு பாடம்.. பும்ராவுக்கு எதிரா நாங்க இத செஞ்சே ஆகணும் – இங்கி மைக்கேல் வாகன் பேட்டி

0
209

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற டிசம்பர் 6ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரரான மைக்கேல் வாகன் அடுத்த வருடம் இங்கிலாந்தில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா தலைமையிலான இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. இதில் இந்திய அணியின் கேப்டனான பும்ரா சிறப்பாக பந்துவீசி முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்சில் மூன்று விக்கெட்டுகளும் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

மேலும் ஆஸ்திரேலியா அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வரிசையில் பெரிதாக இடது கை ஆட்டக்காரர்கள் இல்லாதது ஆஸ்திரேலியா அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் ஆஸ்திரேலிய அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் அனைவரும் வலது கை ஆட்டக்காரர்கள் என்பதால் பும்ராவின் பந்துவீச்சை சமாளிக்க இடது கை ஆட்டக்காரர் அவசியம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் வாகன் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த வருடம் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளதால் சில மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்ட் போட்டியை பார்க்கும்போது இங்கிலாந்து அணியின் முதல் மூன்று இடங்களுக்குள் ஒரு இடது கை ஆட்டக்காரர் தேவை என்பதை உணர்ந்தேன். பும்ரா புதிய பந்தில் அற்புதமாக செயல்பட்டு ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசையை சீர்குலைத்தார். நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுசாக்னே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் போன்றவர்களுக்கு சிறப்பான பந்துவீச்சு தாக்குதலை தொடுத்தார்.

இதையும் படிங்க:165 ரன்.. 9 பேர் ஒற்றை இலக்கம்.. புதிய ஜிம்பாப்வே அணியை பாகிஸ்தான் வென்றது.. முதல் டி20

இதனால் இடது கை பேட்ஸ்மேன்கள் பும்ராவை எதிர்கொள்ள பொருத்தமானவர்கள் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவில் மூன்றாவது வரிசையில் ஸ்டோக்ஸ் போன்ற ஒருவர் இருப்பது வசதியானது. ஏனெனில் இந்த சூழ்நிலைகளுக்கு அவர் மிகப் பொருத்தமாக இருப்பார்” என்று மைக்கேல் வாகன் கூறியிருக்கிறார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற ஆறாம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று முழு திறமையை வெளிப்படுத்தும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

- Advertisement -