நான் எதிர் டீம்தான்.. ஆனா ஆர்சிபி செஞ்சத இந்த கண்ணோட்டத்துல பார்த்தா.. நம்பவே முடியல – புவனேஸ்வர் குமார் பேட்டி

0
245

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தற்போது நடைபெற்று முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சிறந்த வீரர்களை வாங்கி தனது அணியை வலுவாக கட்டமைத்தது. பேட்டிங் பந்துவீச்சு என இரண்டு துறைகளுக்கும் சரியான ஆட்களை தேர்வு செய்தது.

இந்த சூழ்நிலையில் பெங்களூர் அணிக்காக 10.25 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டிருக்கும் புவனேஸ்வர் குமார் ஆர்சிபி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுவரை ஐபிஎல் பட்டம் இல்லாத அணிகளில் ஒன்றாக கருதப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அதிக அளவிலான ரசிகர் பட்டாளங்களை வைத்திருக்கிறது. தங்கள் அணி கோப்பையை வெல்லாவிட்டாலும் விராட் கோலி மீதான அன்பும் பெங்களூர் அணி மீதான அன்பும் ரசிகர்கள் அப்படியே கடைப்பிடித்து முன்னோக்கி எடுத்துச் செல்கின்றனர். இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் மோசமாக விளையாடிய பெங்களூர் அணி அதற்குப் பிறகு தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

இந்த சூழ்நிலையில் கடந்த ஏலங்களில் செய்த தவறை திருத்திக் கொண்ட பெங்களூர் அணி இந்த முறை பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைக்கும் மிகச் சரியான ஆட்களை தேர்வு செய்திருக்கிறது என்று தான் கூற வேண்டும். மேலும் தனது ஐபிஎல் வாழ்க்கையை பெங்களூர் அணிக்காக ஆரம்பித்த புவனேஸ்வர் குமார் திரும்பவும் 18-வது சீசனில் அதே அணிக்காக விளையாட இருக்கிறார். இந்த சூழ்நிலையில் ஒரு கிரிக்கெட் ரசிகனாக கடந்த ஆண்டு பெங்களூரு அணியின் நிலைமையை பார்த்தால் மிக ஆச்சரியமாக இருக்கிறது என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதியில் ஆர்சிபி விளையாடிய விதம் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. இரண்டாவது பாதியில் அவர்கள் விளையாடிய விதம் முற்றிலும் வேறாக இருந்தது. ஒரு எதிர்க்கட்சியில் இருந்து அதன் கண்ணோட்டத்தை பார்க்காமல் ஒரு கிரிக்கெட் வீரராக அல்லது ஒரு கிரிக்கெட்டை நேசிக்கும் பையனாக இரண்டாவது பாதியில் அவர்கள் விளையாடிய விதம் பாராட்டுக்குரியது.

இதையும் படிங்க:ரோஹித் கோலி மனசு வச்சாதான்.. சாம்பியன்ஸ் டிராபி இந்த மாதிரி நடக்கும் – பாக் பசித் அலி பேட்டி

இதில் எப்போதுமே தோல்வி பாதையில் இருந்து மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பவது முக்கியமான விஷயம். பெங்களூர் அணி ஏலத்தில் என்னை எடுக்குமா என்பது எனக்கு தெரியவில்லை ஏனென்றால் ஏலம் என்பது முற்றிலும் வேறானது. பெங்களூர் அணி திரும்ப என்னை வாங்கிய பிறகு பயிற்சியாளர் இயக்குனர் மற்றும் அனைவரிடமிருந்தும் எனக்கு செய்தி வந்தது. பெங்களூர் அணிக்கு திரும்பியதில் மகிழ்ச்சி. அதில் இருக்கும் பெரும்பாலான வீரர்கள் முன்பே பழக்கமானவர்கள் தான். மேலும் புதிய வீரர்களை சந்தித்து மூன்று மாதம் ஒன்றாக விளையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது முறை ஆர்சிபி அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு சிறந்த அணியை எடுத்திருக்கிறது” என்று கூறுகிறார்.

- Advertisement -