பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் தொடருக்குத் தகுந்தவாறு தயாராகி வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பசித் அலி சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர்
பாகிஸ்தானில் மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் இருந்து நடைபெற உள்ளது. இதற்கு முன்னர் கடைசியாக நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய அணி பாகிஸ்தான் சென்று சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கு பெற மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் அது குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் டி20 வடிவத்திற்கு மாற்றப்படலாம் என்று சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியானது. சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி சில மாதங்களுக்கு முன்பு டி20 உலக கோப்பையை வெற்றி பெற்று வரலாறு படைத்த நிலையில் டி20 வடிவத்தில் இருந்து விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றனர். இந்த சூழ்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் டி20 வடிவத்திற்கு மாற்ற வாய்ப்பே இல்லை என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பசித் அலி அதற்கான காரணம் குறித்து சில தகவல்களை கூறி இருக்கிறார்.
ரோஹித் விராட் வாபஸ் வாங்குவார்களா?
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஒரு விஷயம் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் டி20 வடிவத்தில் இருந்து தங்களது ஓய்வு முடிவை திரும்ப வாபஸ் வாங்குவார்களா? ஒருவேளை அவர்கள் தங்களது ஓய்வு முடிவை திரும்பப் பெறவில்லை என்றால் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் எப்படி டி20 வடிவத்தில் நடைபெறும்? அதற்கு வாய்ப்பே இல்லை. ரோகித் சர்மா, ஜடேஜா மற்றும் விராட் கோலி ஆகியோர் இல்லாமல் தொடரை நடத்துவதற்கு ஸ்பான்சர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்.
இதையும் படிங்க:153 ரன்.. சிக்கந்தர் ராஸா போராட்டம் வீண்.. ரஷித் கான் நவீன் அசத்தல்.. ஆப்கான் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது
எனவே இது டி20 வடிவத்தில் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை” என்று கூறி இருக்கிறார். அதாவது இந்தியாவின் நட்சத்திர வீரர்களான இவர்கள் இல்லை என்றால் போட்டியை ஒளிபரப்பும் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். அதாவது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இல்லையெனில் போட்டியை பார்க்கும் ரசிகர்கள் மற்றும் மக்கள் ஆகியோரின் எண்ணிக்கை பெருமளவு பாதிக்கப்படும் என்பதால் இது ஒரு நாள் வடிவத்திலேயே நடைபெறும் என்று பசித் அலி கூறி இருக்கிறார்.