நாளை ஐபிஎல் மெகா ஏலம்.. அடிக்க போகும் ஜாக்பாட்.. டி20 கிரிக்கெட்டில் புவனேஸ்வர் குமார் நிகழ்த்திய ஸ்பெஷல் சாதனை

0
352

ஐபிஎல் 2025 சீசன் கிரிக்கெட் திருவிழா அடுத்த வருடம் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான மெகா ஏலம் நாளை முதல் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள ஆர்வம் இருக்கும் வீரர்கள் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான புவனேஸ்வர் குமார் டி20 கிரிக்கெட்டில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் 2025 மெகா ஏலம்

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக திகழ்ந்த புவனேஸ்வர் குமார் ஐபிஎல் கிரிக்கெட்டிலும் ஒரு முக்கிய தாக்கத்தினை ஏற்படுத்தி இருக்கிறார். 2009ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக தனது அறிமுக சீசனை விளையாடிய நிலையில் அதற்குப் பின்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்குச் சென்று தற்போது அந்த அணியில் ஒரு முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார்.

இதுவரை புவனேஸ்வர் குமார் இந்திய அணிக்காக 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 63 விக்கெட்டுகளும், 121 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 141 விக்கெட்டுகளும் எடுத்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்று வரும் சையது முஸ்தாக் அலி டிராபியில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட் எடுத்ததன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.

- Advertisement -

டி20 கிரிக்கெட்டில் புவனேஸ்வர் குமார் சாதனை

இந்தியாவின் முக்கிய உள்நாட்டு தொடரான சையது முஸ்தாக் அலி டிராபியில் டெல்லி மற்றும் உத்திரபிரதேச அணிகள் விளையாடிய போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் குவித்தது. இதில் உத்தரபிரதேச வீரர் புவனேஸ்வர் குமார் ஒரு விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலமாக ஒட்டு மொத்த டி20 வரலாற்றில் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.

இதையும் படிங்க:பும்ரா மட்டுமே பிரச்னை இல்லை.. இந்த விஷயத்துல நாங்க கவனம் செலுத்தணும் – ஆஸி ஹெட் கோச் பேட்டி

இதுவரை 287 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள புவனேஸ்வர் குமார் 300 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார். நாளை ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் ஐதராபாத் அணி அவரை தக்க வைக்காமல் விடுவித்து இருக்கிறது. எனவே அவரது அடிப்படை விலையாக இரண்டு கோடி இருக்கும் நிலையில் அதைத் தாண்டி நல்ல விலைக்கு புவனேஸ்வர் குமார் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே எத்தனை கோடிக்கு எந்த அணியால் வாங்கப்படுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -