தோனி யார் தெரியுமா?.. இப்படி செஞ்சது ரொம்ப தப்பு – பாகிஸ்தான் பத்திரிக்கையாளரை கண்டித்த ஹர்பஜன் சிங்

0
785
Harbhajan

பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவர் மகேந்திர சிங் தோனியை வைத்து பதிவிட்டதற்கு இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் கடுமையான விமர்சனத்தை அந்த பத்திரிகையாளரை டேக் செய்து வெளியிட்டு இருக்கிறார். அதில் தோனி குறித்து மிகவும் உயர்வாகப் பேசியிருக்கிறார்

மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி 2007 மற்றும் 2011 ஆம்ஆண்டு உலகக் கோப்பை தொடரை வென்ற பொழுது, அந்த இரண்டு இந்திய அணியிலும் மகேந்திர சிங் தோனியை விட மூத்த வீரராக ஹர்பஜன் சிங் இடம் பெற்று இருந்தார். மேலும் இரண்டு உலகக் கோப்பை வெற்றிகளிலும் ஹர்பஜன் சிங் பங்கு கணிசமாக இருந்தது.

- Advertisement -

அதே சமயத்தில் எப்பொழுதாவது மகேந்திர சிங் தோனி குறித்து பேசும் பொழுது ஹர்பஜன் சிங் கூறிய சில விஷயங்கள் சர்ச்சையாகவும் மாறி இருக்கிறது. 2007 ஆம் ஆண்டு ஜோகிந்தர் சிங் சர்மாவுக்கு ஓவர் கொடுத்தது தோனி கிடையாது அனைவரும் சேர்ந்து ஆலோசனை செய்து அதை செய்தோம் என்று கூறியிருந்தார். இப்படியான விஷயங்கள் அந்த நேரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஃபரித் கான் மகேந்திர சிங் தோனி மற்றும் முகமது ரிஸ்வான் புகைப்படங்களை வைத்து, இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்று நேர்மையாக சொல்லுங்கள் என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு ஹர்பஜன் சிங்கை மிகக் கடுமையாக கோபப்படுத்தி விட்டது.

- Advertisement -

இதற்கு அந்த பத்திரிகையாளருக்கு பதில் அளித்த ஹர்பஜன் சிங் “என்ன இது ஒரு முட்டாள்தனமான கேள்வி. முகமது ரிஸ்வான் இடம் கேட்டாலும் இதற்கு அவரே நேர்மையான பதிலை சொல்லுவார். எனக்கு முகமது ரிஸ்வானை மிகவும் பிடிக்கும் அவர் நல்ல வீரர். அவர் எப்பொழுதும் நல்ல இன்டெண்ட் உடன் விளையாடுவார். இப்பொழுது கூட மகேந்திர சிங் தோனி ஸ்டெம்புகளுக்கு பின்னால் நம்பர் ஒன் விக்கெட் கீப்பராக இருக்கிறார்” என்று காட்டமாகப் பதிலளித்திருக்கிறார்.

இதையும் படிங்க : நல்லா கம்பீரை தெரியும்.. நிச்சயம் இந்திய அணியில் இந்த 2 விஷயத்தை செய்யாம விடமாட்டார் – தினேஷ் கார்த்திக் பேட்டி

மகேந்திர சிங் தோனிக்கு ஆதரவாக ஹர்பஜன் சிங் பாகிஸ்தான் பத்திரிக்கையாளரை கடுமையாக விமர்சனம் செய்து பேசி இருப்பது தற்பொழுது மகேந்திர சிங் தோனியின் ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அவர்கள் ஹர்பஜன் சிங் பேசியதை சமூக வலைதளங்களில் பரவலாக பகிர்ந்து வருகிறார்கள்.

- Advertisement -