தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20ஐ தொடரில் ராகுல் மற்றும் பண்டுக்கு பதிலாக இந்த 2 இளம் வீரர்களை தேர்ந்தெடுத்து இருக்கலாம் – ஹர்ஷா போக்லே கருத்து

0
273

நடப்பு ஐபிஎல் தொடருக்கான லீக் சுற்று இன்றுடன் நிறைவு பெறுகின்றது. 24ம் தேதி துவங்கி 29ஆம் தேதி வரையில் ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி நடைபெற்று முடிய இருக்கின்றது. வருகிற 29ம் தேதியுடன் ஐபிஎல் தொடர் நிறைவு பெறுகின்ற நிலையில், ஜூன் 9ம் தேதி முதல் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி களமிறங்க இருக்கின்றது.

பின்னர் அயர்லாந்து இங்கிலாந்து மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக டி20 போட்டிகளுக்கான தொடர் நடைபெற இருக்கின்றது. இன்று பிசிசிஐ தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாட இருக்கும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது.

அதில் இந்திய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ராகுல் டிரிபாதி பெயர் இடம்பெறவில்லை. அன் கேப்டு வீரர்கள் மத்தியில் மிக சிறப்பாக விளையாடி வரும் அவர் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை நெடுநாளாக தேடி வருகிறார். அதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சிறப்பாக விளையாடி அந்த அணியை பிளே-ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ள சஞ்சு சாம்சன் பெயரும் இடம் பெறவில்லை.

என்னுடைய அணியில் இவர்கள் இருவர்தான் விளையாடுவார்கள்

பிரபல வர்ணனையாளராக ஹர்ஷா போக்லே தன்னுடைய டுவிட்டர் கணக்கில் ஒரு பதிவிட்டார். அவர் பதிவிட்ட ட்வீட்டில் “என் மனதில் நான் விளையாடிய அணியில் கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு இடமில்லை. என்னுடைய அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ராகுல் டிரிபாதி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியா போன்ற மைதானங்களில் சஞ்சு சாம்சன் பெயர் ஷாட் லிஸ்டில் இருக்கும் என்றும் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

அவரது பதிவை மேற்கோள் காட்டி ஒரு சில இந்திய ரசிகர்கள் இது சரியான முடிவு சார். இதை தான் நாங்களும் எண்ணினோம் இவர்கள் இருவருக்கும் இந்திய கிரிக்கெட்நிர்வாகம் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.