நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் இன்று ஓமான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் இருவரும் ஆச்சரியப்படத்தக்க நகர்வுகளை செய்திருக்கிறார்கள்.
இந்திய அணி தான் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளை வென்று ஏற்கனவே இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. இதைத்தொடர்ந்து இன்று முதல் சுற்றின் கடைசி போட்டியில் ஒமான் அணிக்கு எதிராக மோதுகிறது.
இந்தியாவுக்கு சாதகம்
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணிக்கு இரண்டாவது சுற்று பேட்டிங் பயிற்சி பெறுவதற்கு டாஸ் உதவியாக அமைந்தது. இந்திய அணியில் பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டது. இவர்களுடைய இடத்தில் அர்ஸ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா இருவரும் இடம் பெற்றார்கள்.
இதைத் தொடர்ந்து இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்ததில் துணை கேப்டன் கில் 8 பந்தில் 5 ரன் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா வழக்கம்போல் அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார்.
சூரியகுமார் முடிவு
இதைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் வந்த சஞ்சு சாம்சன் 45 பந்தில் 56 ரன், ஹர்திக் பாண்டியா 1, அக்சர் படேல் 26, சிவம் துபே 5, திலக் வர்மா 29, அர்ஸ்தீப் 1, ஹர்ஷித் ராணா 13, குல்தீப் யாதவ் 1 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது.
இதையும் படிங்க : ஆசியா கப் 2வது சுற்று.. போட்டி அட்டவணை.. இந்திய அணி விளையாடும் தேதிகள் – முழுமையான விபரங்கள்
இன்றைய போட்டியில் கேப்டன் சூரியகுமார் யாதவ் இறுதிவரையில் பேட்டிங் செய்ய வரவில்லை. மேலும் கம்பீர் யூனிட்டில் யாரையும் புதிதாகக் கொண்டு வந்து மாற்றவில்லை. கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவரும் சேர்ந்து தாங்கள் தொடர்ந்து விளையாடும் பேட்டிங் யூனிட் பயிற்சி பெறும் விதமாக பேட்டிங் வரிசையை அமைத்தார்கள். இதன் காரணமாக கேப்டன் சூரியகுமார் யாதவ் என்று பேட்டிங் செய்ய வராமல், ஒமான் போட்டியை பயிற்சி போட்டியாக மாற்றி கெத்து காட்டி இருக்கிறார்.






