ஆசியா கப் 2வது சுற்று.. போட்டி அட்டவணை.. இந்திய அணி விளையாடும் தேதிகள் – முழுமையான விபரங்கள்

0
109
Ict

இந்திய அணி இன்று முதல் சுற்றில் கடைசி போட்டியில் ஓமான் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இதைத் தொடர்ந்து ஆரம்பிக்கும் இரண்டாவது சுற்று போட்டிக்கான அட்டவணை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

முதல் சுற்றில் எட்டு அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. இதில் இரண்டு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுகின்றன. இந்த நான்கு அணிகளும் தங்களுக்குள் ஒருமுறை மோதும். இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் மணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும்.

- Advertisement -

இந்திய அட்டவணை

நடப்பு ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்ற 8 அணிகளில் ஏ பிரிவில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. இதேபோல பி பிரிவில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளிடம் தோல்வி அடைந்து வெளியேறியது.

இரண்டாவது சுற்றில் இந்திய அணி செப்டம்பர் 21ஆம் தேதி பாகிஸ்தான், செப்டம்பர் 24ஆம் தேதி பங்களாதேஷ், செப்டம்பர் 26 ஆம் தேதி இலங்கை அணிகளுக்கு எதிராக துபாய் மைதானத்தில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

மொத்த அட்டவணை

செப்டம்பர் 20, சனி: இலங்கை vs பங்களாதேஷ் – மாலை 6:30 IST – துபாய்
சர்வதேச கிரிக்கெட் மைதானம், துபாய்
செப்டம்பர் 21, ஞாயிறு: இந்தியா vs பாகிஸ்தான் IST மாலை 6:30 மணி – துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம், துபாய்
செப்டம்பர் 23, செவ்வாய்: பாகிஸ்தான் vs இலங்கை – மாலை 6:30 IST – ஷேக் சயீத் மைதானம், அபுதாபி

இதையும் படிங்க : 12 வருஷத்துக்கு பிறகு ஜெயிச்ச அந்த டீம் மாதிரி.. எங்களால இந்திய அணியை தோற்கடிக்க முடியும் – கோச் சமி கருத்து

செப்டம்பர் 24, புதன்: இந்தியா vs வங்கதேசம் – மாலை 6:30 IST – துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம், துபாய்
செப்டம்பர் 25, வியாழன்: பாகிஸ்தான் vs வங்கதேசம் – மாலை 6:30 IST – துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம், துபாய்
செப்டம்பர் 26, வெள்ளி: இந்தியா vs இலங்கை IST மாலை 6:30 மணி – துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம், துபாய்

- Advertisement -