திலக் வர்மா நம்பர் 3ல் விளையாட காரணமே.. அவர் சொன்ன அந்த வார்த்தைதான்.. அதான் வாய்ப்பு கொடுத்தேன் – இந்திய கேப்டன் பேட்டி

0
173

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றது குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா தென்னாபிரிக்கா மூன்றாவது டி20 போட்டி

இந்த இரண்டு அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் மூன்றாவது வரிசையில் களம் இறங்கிய திலக் வர்மா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 56 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் 8 பவுண்டரி மற்றும் ஏழு சிக்ஸர் என 107 குவித்து ஆட்டம் இழந்தார். அவருக்கு அடுத்தபடியாக தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 25 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி களம் இறங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சை ஓரளவு சமாளித்து ரன்கள் குவித்துக் கொண்டிருந்த தென்னாபிரிக்க அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் இழந்தது. இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணியால் ஏழு விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் மட்டுமே குவித்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றது குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது – கேப்டன் சூரியகுமார் யாதவ்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “மூன்றாவது போட்டியில் பெற்ற வெற்றி மகிழ்ச்சியாக இருக்கிறது. டீம் மீட்டிங்கில் இதுபோன்று ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்று விவாதித்தோம். அதைத்தான் செய்யச் சொல்லியும் இருக்கிறோம். அதைத்தான் அவர்கள் விளையாடும் பிரான்சிஸ் அணிக்காகவும், வலைகளிலும் செய்து கொண்டிருக்கிறார்கள். இதுபோன்று வெற்றி பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இளம் வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்து எனது வேலையை எளிதாக்கி விடுகின்றனர்.

இதையும் படிங்க:219 ரன்.. டி20ல் இந்தியா மெகா சாதனை.. 16 பந்தில் பயம் காட்டிய ஜான்சென்.. தென் ஆப்பிரிக்க அணி தோல்வி

நாம் சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக உணர்கிறேன். முதல்முறையாக நாங்கள் மைதானத்தில் ஆறு முதல் ஏழு நிமிடங்கள் வரை போட்டியில் முன்னணியில் இருந்தோம். திலக் வர்மா போட்டி தொடங்குவதற்கு முன்பாக எனது அறைக்கு வந்து மூன்றாம் வரிசையில் விளையாட வாய்ப்புக் கொடுங்கள், நான் நன்றாக செயல்பட விரும்புகிறேன் என்று கூறினார். சிறப்பாக செயல்படுங்கள் என்று கூறி அதற்கான வாய்ப்பையும் கொடுத்தேன். சொன்னது போலவே அவர் சிறப்பாக செயல்பட்டார். அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -