219 ரன்.. டி20ல் இந்தியா மெகா சாதனை.. 16 பந்தில் பயம் காட்டிய ஜான்சென்.. தென் ஆப்பிரிக்க அணி தோல்வி

0
1347
Tilak

இன்று தென் ஆப்பிரிக்கா அன்னிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது.

தற்போது சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று இருந்த நிலையில் இன்று மூன்றாவது போட்டி நடைபெற்றது.

- Advertisement -

திலக் வர்மா சாதனை சதம்

இந்த போட்டியிலும் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் இந்த போட்டியிலும் தொடர்ந்து இரண்டாவது முறையாக டக் அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா சிறப்பாக விளையாடி 25 பந்தில் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

முதல் ஓவரிலேயே சாம்சன் விக்கெட் விழுந்ததால் மூன்றாவது வீரராக உள்ளே வந்த கிழக்கு வர்மா மிகச் சிறப்பாக விளையாடி தனது முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்தார். இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்ற அவர் 56 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 107 ரன்கள் எடுத்தார். குறைந்த வயதில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக டி20 சதம் அடித்த வீரராக சாதனை படைத்தார். இறுதியாக இந்திய அணி 6 கிரிக்கெட் இழப்புக்கு 219 ரன் எடுத்தது. சிமிலேன் மற்றும் மகராஜ் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இந்திய அணி அபார வெற்றி

இதைத்தொடர்ந்து பெரிய இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ரிக்கல்டன் 15, ஹென்றிக்ஸ் 21, மார்க்ரம் 29, ஸ்டப்ஸ் 12, டேவிட் மில்லர் 15
ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். கடைசி நான்கு ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 78 ரன்கள் தேவைப்பட்டது.

இந்த நிலையில் கிளாஸன் 22 பந்தில் 41 ரன் எடுக்க, மார்க்கோ ஜான்சென் 16 அரை சதம் அடித்து, 17 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்களுடன் 54 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு பயத்தை காட்டினார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. இறுதியாக இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற முடிந்தது. இந்திய தரப்பில் வருண் சக்கரவர்த்தி இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : 7 சிக்ஸ்.. 8 ஃபோர்ஸ்.. திலக் வர்மா உலக கிரிக்கெட்டில் முதல் வீரராக சாதனை.. ரெய்னா ரெக்கார்ட் முறியடிப்பு

இந்த ஆண்டில் இந்திய அணி எட்டாவது முறையாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200 ரன்கள் தாண்டி அடித்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த ஒரு அணியும் ஒரு ஆண்டில் எட்டு முறை 200 ரன்கள் அடித்ததில்லை. இந்திய அணி முதல்முறையாக இந்த சாதனையை படைத்திருக்கிறது.

- Advertisement -