நாளை டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இந்திய ரசிகர்களை சைலன்ட் செய்வதே தங்கள் இலக்கு என நியூசிலாந்து கேப்டன் மிட்சல் சான்ட்னர் கூறியிருந்தார். இதற்கு இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் பதில் அளித்துள்ளார்.
இதுவரையிலான டி20 உலக கோப்பை வரலாற்றில் இந்தியா நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் சந்தித்துக் கொண்டதில்லை. மேலும் சமீபத்தில் இரு அணிகளும் இந்தியாவில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடினார்கள். அதில் இந்திய அணி அதிரடியாக விளையாடி தொடரை வென்று இருந்தது.
சூரியகுமார் பதிலடி
கடந்த முறை 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரன் இறுதிப்போட்டி இதே குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. அப்போது ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் இந்திய ரசிகர்களை சைலன்ட் செய்வோம் எனக் கூறியிருந்தார். அதற்குப் பிறகு ஒவ்வொருவரும் இதையே சொல்லி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு பதிலளித்துள்ள சூரியகுமார் யாதவ் கூறும்போது “எல்லோரும் இதையேதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஏதாவது கொஞ்சம் புதியதாக முயற்சி செய்ய வேண்டும். இது அருமையான உணர்வு. எங்கள் அணியில் எல்லோரும் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறார்கள். பெரிய இறுதிப் போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்”
இந்த வீரர்கள் மாற்றுவார்கள்
“இந்தியாவில் இப்படி ஒரு இறுதிப் போட்டியில் இந்திய அணியை வழிநடத்துவது என்பது எனக்கு மிகப் பெரிய விஷயம். இது என்னையும் என் குடும்பத்தாரையும் மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. அதே சமயத்தில் உற்சாகம் மிகுதியால் நாம் ஏதாவது செய்தால் அது தவறாகிப் போய்விடலாம். அதே சமயத்தில் அழுத்தத்தை ஏற்றுக் கொள்ளவும் கூடாது”
இதையும் படிங்க : அகமதாபாத்தில் இந்தியாவை சைலன்ட் ஆக்குவோம்.. அதுக்காக இதை செய்ய தயக்கம் இல்லை – மிட்சல் சான்டனர் சவால்
“எங்கள் அணியில் அக்சர், இஷான், அர்ஸ்தீப், சிவம் துபே போன்றவர்கள் கலகலப்பானவர்கள். அவர்கள் அணியில் சூழ்நிலையை மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். அதே சமயத்தில் போட்டியின் போதும் என்ன செய்ய வேண்டும் என அவர்களுக்கு தெரியும். நல்ல குணத்தை வெளிப்படுத்தக் கூடிய வீரர்கள் இருக்கிறார்கள். நாங்கள் ஒட்டுமொத்தமாக நல்ல நிலையில் இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.






