அகமதாபாத்தில் இந்தியாவை சைலன்ட் ஆக்குவோம்.. அதுக்காக இதை செய்ய தயக்கம் இல்லை – மிட்சல் சான்டனர் சவால்

0
6
Santner

நாளை நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இந்திய அணியை சைலன்ட் ஆக்குவோம் என நியூசிலாந்து கேப்டன் மிட்சல் சான்ட்னர் கூறியிருக்கிறார்.

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இந்தியா நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்த போட்டி இந்தியாவின் சொந்த மைதானத்தில் நடைபெறுவதால் இந்திய அணி சாதகம் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அகமதாபாத் ராசி

அதே சமயத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இதே மைதானத்தில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை வென்று ரசிகர்களை சைலன்ட் செய்தது. எனவே இந்த மைதானம் இந்திய அணிக்கு ராசி இல்லாத மைதானமாக பார்க்கப்படுகிறது.

மேலும் இதே உலக கோப்பை தொடரில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியிடம் இதே மைதானத்தில் தோல்வி அடைந்தது. எனவே இந்த காரணத்தால் இந்த மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறுவது பல இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதயங்களை உடைப்போம்

இதுகுறித்து நியூசிலாந்து கேப்டன் மிட்சல் சான்ட்னர் கூறும்போது “ஒரு கோப்பையை வெல்வதற்கு எனக்கு எந்த விதமான தயக்கமும் கிடையாது. இப்படிப்பட்ட போட்டிகளில் எங்களுடைய முந்தைய அணிவிகளையும் தற்போதைய அணியையும் பார்த்தால் மிகவும் சிறப்பாக விளையாடி வந்திருக்கிறோம். சூழ்நிலையையும் எதிர் அணியையும் பார்த்து பயப்பட இருக்க முயற்சி செய்கிறோம். நாங்கள் மைதானத்திற்கு சென்று எங்கள் வேலையை செய்கிறோம். இந்த முறையில் இதில் எந்த மாற்றமும் இல்லை”

இதையும் படிங்க : இப்ப இல்ல எப்பவுமே பும்ராதான் தலைசிறந்தவர்.. இந்த ஒரே ஒரு காரணம் போதும் – ஸ்டூவர்ட் பிராட் கருத்து

“இந்த போட்டி நிச்சயமாக சவாலாக இருக்கும். மேலும் இந்த போட்டிகள் நாங்கள் பேவரைட் அணியாக இருக்க மாட்டோம். ஆனால் இதைப் பற்றி எல்லாம் எனக்கு எந்த கவலையும் இல்லை. நாங்கள் எங்களின் சிறிய விஷயங்களை சரியாக செய்தாலும், ஒரு அணியாக செயல்பட்டாலும் கோப்பையை வெல்ல முடியும். ஒருமுறை கோப்பையை வெல்வதற்கு சிலரின் மனதை உடைப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -