கேஎல் ராகுலின் அருமையை மக்கள் இப்போது புரிஞ்சுக்கணும்.. அவர் இப்படி பேட்டிங் செய்ய அதுதான் காரணம் – இர்பான் பதான்

0
104

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடி இறுதி கட்டத்தில் இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.

இந்த சூழ்நிலையில் அவர் தாழ்வாக பேட்டிங் செய்வதற்கான காரணம் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் சில முக்கிய கருத்துக்களை பேசியிருக்கிறார்.

- Advertisement -

வதோதராவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு பேட்டிங் செய்த இந்திய அணி கேப்டன் கில் 56 ரன்கள் மற்றும் விராட் கோலி 93 ரன்கள் குவிக்கும் வரை ஆட்டத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அதற்குப் பிறகு விக்கெட்டுகள் தொடர்ச்சியாக விழ, ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹர்ஷித் ராணா மற்றும் கே எல் ராகுல் சிறப்பாக விளையாடி 31 பந்துகளில் 37 ரன்கள் என பார்ட்னர்ஷிப் அமைத்தது.

அதுக்கு பின்னர் ஹர்ஷித் ராணா ஆட்டம் இழக்க, ஒரு கட்டத்தில் கேஎல் ராகுல் 49 வது ஓவரில் இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். 29 ரன்கள் எடுத்த ராகுல் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.

- Advertisement -

இந்த வெற்றி குறித்து இர்பான் பதான் பேசும்போது ” கே எல் ராகுல் பேட்டிங் செய்யும்போது ஏன் தாழ்வான பகுதியில் களமிறங்குகிறார் என்று மக்கள் அடிக்கடி கேட்பார்கள். ஆனால் 34 ஆவது ஓவருக்கு பிறகு விதிமுறை மாற்றப்பட்டு புதிய பந்தில் சிறிது ரிவர்ஸ் ஆகிறது என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் அது மெதுவாக இருக்கும் சூழ்நிலைகளில் தொழில்நுட்ப ரீதியாக ஒரு பேட்டர் தேவைப்படுகிறார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க:தோனிக்கும் இது நடந்திருக்கு.. என்ன பொருத்தவரை நான் சந்தோஷமா இருக்கேன்.. கடவுளுக்கு நன்றி – விராட் கோலி பேச்சு

அந்த இடத்தில் தான் அவர் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறார். முதல் ஒருநாள் போட்டியில் மற்ற பேட்டர்கள் சிரமப்பட்டனர். ஆனால் கேஎல் ராகுல் கடைசி வரை ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். 49 வது ஓவரில் இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் என ஆட்டத்தை முடிப்பார் என்று கணிக்கப்பட்டது” என்று அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -