நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த ஜெய்ஸ்வால் அது குறித்து தனக்கு முன்பே கூறிவிட்டதாக இந்திய வீரர் துருவ் ஜுரல் அவருடனான பேட்டியில் கூறியிருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் சதம் அடித்தார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து என மூன்று நாடுகளிலும் தான் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஏ அணியில் சொல்லிவிட்டார்
இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய ஏ அணி இங்கிலாந்து ஏ அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த இரண்டு போட்டிகளிலும் ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜுரல் இருவரும் இங்கிலாந்தில் விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து துருவ் ஜுரல் பேசும் பொழுது ” இந்திய ஏ அணிக்காக நாம் இருவரும் விளையாடும்போது இங்கிலாந்தில் எப்படி கண்டிஷன் இருந்தாலும் ரன் எடுக்க வேண்டும் என்று என்னிடம் நீங்கள் சொன்னீர்கள். வலைகளில் பந்து அதிகமாக நகர்ந்த பொழுதும் கூட நீங்கள் பயிற்சியை விடவில்லை. நீங்கள் சவாலை விரும்புகிறீர்கள். இந்த பிடிவாதம்தான் உங்களை வித்தியாசமாக மாற்றுகிறது. ஆனால் போட்டி இல்லாத நேரங்களில் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்” என்று கூறினார்.
என்னுடைய பயிற்சியும் நோக்கமும் இதுதான்
இதற்கு சிரித்துக்கொண்டே பதில் அளித்த ஜெய்ஸ்வால் கூறும் பொழுது ” நான் பெரிதாக அதிகம் எதையும் செய்வது கிடையாது. சீரியஸாக இருக்க வேண்டிய நேரத்தில் நான் சீரியஸாக வேலை செய்வேன். மேலும் என்னுடைய தயாரிப்புகளில் கவனத்தை செலுத்தி என்னுடைய மனதை மிகவும் அமைதியாக வைத்துக் கொள்ள நான் விரும்புகிறேன்”
இதையும் படிங்க : இப்ப நீ முட்டாள் கிடையாதுபா.. நேத்து ரிஷப் பண்ட் கொண்டு வந்த பிளான் வேற லெவல் – கவாஸ்கர் பாராட்டு
“நான் அணிக்குள் வரும் பொழுது நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். தனியாக பயிற்சி செய்வதையும் என்னை தயார்படுத்திக் கொள்வதையும் விரும்புகிறேன். நான் பயிற்சியில் எதிர் கொள்ளும் ஒவ்வொரு பண்பும் கடினமான சூழ்நிலையில் எனக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் அழுத்தத்தில் பல தருணங்களில் இருந்திருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். பயிற்சிப் போட்டியிலும் எனக்கு இங்கு ரன்கள் எடுக்க உதவி இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.






