இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணியின் கேப்டன் சுப்மான் கில் அபாரமாக விளையாடி இரட்டைச் சதம் அடித்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் தனது பேட்டிங்கை எவ்வாறு மேம்படுத்தினேன் என கில் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணியின் கேப்டன் சுப்மான் கில் முதல் இன்னிங்சை சிறப்பாக விளையாடி அபாரமான இரட்டைச் சதம் அடித்து 387 பந்துகளில் 269 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 587 ரன்கள் குவித்தது.
இந்த சூழ்நிலையில் தற்போது முதல் இன்னிங்ஸ் விளையாடி வரும் இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்த சூழ்நிலையில் தான் இரட்டை சதம் அடித்தது குறித்தும், ரன்கள் வராத போது இந்திய அணியின் கோச் கம்பீர் தனக்கு எப்படி ஆலோசனைகள் வழங்கினார் எனவும் கில் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” நேற்று மதிய உணவு இடைவேளையின் போது அடித்து ஆட முயற்சி செய்து கொண்டிருந்தேன். தேநீர் இடைவேளையின் போது 100 பந்துகள் விளையாடி 30 முதல் 40 ரன்கள் எடுத்திருந்தேன். அப்போது கௌதம் கம்பீர் பாயுடன் பேசினேன். இந்த சமயத்தில் எனக்கு ரன்கள் வரவில்லை, பீல்டர்களை கண்டுபிடித்து வருகிறேன் என்று கூறினேன். அப்போது கம்பீர் பாய் அங்கேயே நிலைத்து நின்று விளையாடினால் ரன்கள் தானாக வரும் என்று கூறினார்.
இதையும் படிங்க:இங்கிலாந்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா அபாரம்.. தோனி, கோலி கேப்டன்ஷியில் தொடாத இமலாய ஸ்கோர்.. ஸ்டோக்ஸ் படைக்கு ஆரம்பமே சோகம்
ஐபிஎல் முடியும் சமயத்தில் நான் எனது பேட்டிங் நுட்பத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன், எனது ஆரம்ப இயக்கம் மற்றும் நிலைப்பாட்டில் நன்றாக கவனம் செலுத்தினேன். ஆனால் 30 முதல் 40 ரன்கள் எடுத்த பிறகு அவுட் ஆகி வெளியேறினேன். இதனால் எனது பேட்டிங்கை நான் மிகவும் ரசித்து விளையாட ஆரம்பித்தேன். ஐபிஎல் தொடர் நடந்து கொண்டிருந்தபோதே நான் சிவப்பு பந்தில் பயிற்சி பெற ஆரம்பித்தது எனக்கு உதவியது” என்று அவர் பேசி இருக்கிறார்.