இங்கிலாந்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா அபாரம்.. தோனி, கோலி கேப்டன்ஷியில் தொடாத இமலாய ஸ்கோர்.. ஸ்டோக்ஸ் படைக்கு ஆரம்பமே சோகம்

0
200

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு 500 ரன்கள் என்ற இலக்கை தாண்டி இங்கிலாந்து மண்ணில் புதிய உச்சத்தை தொட்டிருக்கின்றது. இங்கிலாந்து மண்ணில் இந்தியா கடைசியாக 2007 ஆம் ஆண்டு ஓவல் டெஸ்ட் போட்டியில் 500 ரன்கள் கடந்து இருந்தது.

தற்போது 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மைல்கல்லை இந்திய அணி தொட்டிருக்கின்றது. ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்த போது இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. அதன் பின் தோனி தலைமையில் இரண்டு முறையும், விராட் கோலி தலைமையில் ஒரு முறையும், ரோகித் சர்மா தலைமையில் ஒருமுறையும் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் இத்தகைய ஒரு மைல்கல்லை  தொட்டது கிடையாது.

- Advertisement -

சுப்மன் கில் சாதனை:

இதேபோன்று இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனான கில் இரண்டாவது டெஸ்டில் 269 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். முச்சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்திருக்கின்றார்.

ஜடேஜா 89 ரன்களும், ஜெய்ஸ்வால் 87 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 42 ரன்களும் எடுக்க இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்து இருக்கின்றது. இதன் மூலம் முதல் டெஸ்ட் போட்டியில் செய்த தவறை இந்திய அணி திருத்திக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் இருக்கின்றது.

- Advertisement -

இங்கிலாந்து தடுமாற்றம்:

ஆனால் இங்கிலாந்து வெற்றி பெற வேண்டுமென்றால் அந்த அணியின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டும்  இங்கிலாந்து அணி வீரர்கள் அதிரடியாக விளையாடுவார்கள் என்பதால் முதல் இன்னிங்ஸில் அவர்களை 400 ரன்களுக்குள் சுருட்டி விட வேண்டும்.முடிந்தவரை ஃபாலோ ஆணை இங்கிலாந்து மேல் சுமத்த வேண்டும்.

இதையும் படிங்க: ஆகாஷ் தீப்பால் கடுப்பான கில்.. 300 ரன் வாய்ப்பை தவறவிட்டார்.. களத்தில் என்ன நடந்தது?.. முழு விபரங்கள்

ஏனென்றால் கடைசி இன்னிங்சில் எந்த இலக்கை கொடுத்தாலும் அதனை இங்கிலாந்து அணி வீரர்கள் எட்டி விடுவார்கள் என்பதால் இந்தியாவுக்கு வேறு வழியே கிடையாது. இதனிடையே, இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் பென்டக்கட் விக்கெட்டை இந்திய அணி வீழ்த்தி இருக்கிறது. ஆகாஷ் தீப் பந்துவீச்சில் பென் டக்கட் டக் அவுட் ஆக்கி இருக்கின்றார். இதேபோன்று ஆலி போப் டக் அவுட் ஆக,இங்கிலாந்து அணி 13 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது.

- Advertisement -