இந்திய அணியின் கேப்டன் கில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பந்தை மாற்றுவது தொடர்பாக நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தற்பொழுது பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 385 ரன்கள் எடுத்தது. தற்போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் தாண்டி எடுத்து விளையாடி வருகிறது.
டியூக்ஸ் பந்தின் பிரச்சனை
முன்பு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இங்கிலாந்தில் பயன்படுத்தப்படும் டியூக்ஸ் வகை பந்துகள் வெகு சீக்கிரத்தில் சேதாரம் ஆகிவிடுகிறது. குறிப்பாக பந்தின் பளபளப்பு மற்றும் தையல் சீக்கிரத்தில் தரம் இழந்து விடுகிறது. இதன் காரணமாக பந்துவீச்சாளர்களுக்கு பெரிய உதவிகள் எதுவும் கிடைப்பதில்லை.
இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் சாதனை பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வெளிப்படையாக கருத்து தெரிவித்திருக்கிறார். எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இங்கிலாந்தில் பந்து சீக்கிரத்தில் பழையதாகவும் சேதாரம் அடைந்து விடுவதாகவும் கூறியிருக்கிறார். இந்த போட்டியில் இந்தியா எடுத்த இரண்டாவது புதிய பந்து 20 ஓவர்களுக்கு கூட தாக்கு பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கில் செய்த வாக்குவாதம்
இந்த நிலையில் இரண்டாவது புதிய பந்து சேதாரம் அடைந்த பிறகு நடுவர் மாற்றிக் கொடுத்த பந்தில் இந்திய கேப்டன் கில் திருப்தி அடையவில்லை. இதன் காரணமாக அவர் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட நடுவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து மாற்றப்பட்ட வந்தும் உடனடியாக சேதாரம் அடைய மீண்டும் புதிய பந்து கொண்டுவரப்பட்டது சர்ச்சையாக மாறியிருக்கிறது.
இதையும் படிங்க : 13.. லார்ட்ஸில் பும்ரா முதல் சாதனை.. இந்திய வரலாற்றில் யாரும் எட்டாத மைல் கல்.. இங்கி ரன் குவிப்பு தடுப்பு
இங்கிலாந்து அணி அதிரடியாக பாஸ்பால் விளையாடுவதற்கு வசதியாக பந்தின் தரத்தை குறைத்து விட்டதா? என்று சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் இங்கிலாந்து அணி தங்கள் வசதிக்காக இப்படி குறுக்கு வழியில் இறங்கி இருப்பதாகவும் சிலர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.






