13.. லார்ட்ஸில் பும்ரா முதல் சாதனை.. இந்திய வரலாற்றில் யாரும் எட்டாத மைல் கல்.. இங்கி ரன் குவிப்பு தடுப்பு

0
318
Bumrah

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் பந்துவீச்சில் பும்ரா சிறப்பாக செயல்பட்டு ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி புதிய மெகா சாதனைகளை படைத்திருக்கிறார்.

நேற்று லண்டன் லாட்ஜ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியின் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று இந்திய தரப்பில் பும்ரா ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றி இருந்தார்.

- Advertisement -

முதல் செஷன் அசத்தல்

இதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாள் போட்டி ஆரம்பித்ததும் ஜோ ரூட் 104, பென் ஸ்டோக்ஸ் 44, கிரீஸ் வோக்ஸ் 0 என பும்ரா அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணிக்கு சிறந்த துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால் மற்ற பந்துவீச்சாளர்களால் இதை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.

இதைத் தொடர்ந்து இரண்டாவது செஷன் ஆரம்பித்ததும் மீண்டும் சிறப்பாக பந்து வீசிய பும்ரா ஜோப்ரா ஆர்ச்சர் விக்கட்டை கைப்பற்றி ஐந்து விக்கெட் சாதனையை லார்ட்ஸ் மைதானத்தில் முதல் முறையாக படைத்தார். இங்கிலாந்து அணிக்கு கடைசியில் ஜேமி ஸ்மித் 51, பிரைடன் கார்ஸ் 56 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்து அணி 112.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 285 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பும்ரா சாதனை

வெளிநாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை ஐந்து விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளராக கபில்தேவ் 12 முறை 5 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் இருந்தார். தற்போது 13 வது முறையாக வெளிநாடுகளில் ஐந்தாவது விக்கெட்டை கைப்பற்றி பும்ரா இந்த சாதனையை முறியடித்தார்.

இதையும் படிங்க : 8வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் இங்கிலாந்து அபாரம்.. இந்தியாவுக்கு நெருக்கடி..வில்லனாகும் ஜெமி ஸ்மித்

பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி சேனா நாடுகளில் விளையாடி 13 முறை 5 விக்கெட் கைப்பற்றிய காலகட்டத்தில், இந்திய அணியில் சிராஜ் மற்றும் ஷமி அதிகபட்சமாக மூன்று முறைதான் சேனா நாடுகளில் 5 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்கள். மேலும் இதே காலகட்டத்தில் வெளிநாட்டு வீரர்களில் ரபாடா அதிகபட்சமாக ஏழு முறை வெளிநாடுகளில் ஐந்து விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். ஆனால் பும்ரா யாரும் தொட முடியாத இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -