2வது பந்தில் அவுட்.. அவருக்கு எனது நன்றி.. ஆனா அடுத்து என் திட்டம் இதுதான் – ரோஹித் சர்மா பேட்டி

0
1806

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கான காரணம் குறித்து அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி வெற்றி

மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பந்து வீச தீர்மானிக்க அதன்படி இந்திய அணி பேட்டிங் களமிறங்கியது. அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒரு ரன்னில் வெளியேறினாலும் மற்றொரு தொடக்க வீரர் கில் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவருக்கு பக்கபலமாக விராட் கோலி 52 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 78 ரன்கள், கேஎல் ராகுல் 40 ரன்கள் குவிக்க கில் அபாரமாக விளையாடி 112 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணி 356 ரன்கள் குவித்தது.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சால் 214 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் அக்சார் பட்டேல், ஹர்ஷித்ரானா, ஹர்திக் பாண்டியா மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வெற்றி காரணம் குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

எங்கள் திட்டம் இதுதான்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “தொடர் சென்ற விதத்தைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் சவால்களை எதிர்கொள்வோம் என்று எங்களுக்கு நன்றாக தெரியும். இன்று நாங்கள் வீசப்பட்ட எந்த பந்திற்கும் நன்றாக பதில் அளித்தோம். என்னை ஆட்டம் இழக்கச் செய்த மார்க் வுட்டுக்கு நன்றி. பந்து வீச்சாளர் உங்களை வெளியேற்றுகிறார். சில நேரங்களில் விஷயம் உங்கள் வழியில் செல்லாது. இந்த தொடரில் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று எனக்கு தோன்றுகிறது. ஆனாலும் நாங்கள் சில விஷயங்கள் செய்தோம் அதைப்பற்றி தற்போது விவாதிக்கப் போவதில்லை.

இதையும் படிங்க:3-0 சொந்த மண்ணில் மாஸ் காட்டிய ரோஹித் அணி.. கில் அபார சதம்.. 142 ரன்னில் சாதனை வெற்றி.. இங்கி 3வது ஒருநாள்

எங்கள் அணிக்குள் நேர்மறையான விஷயம், தகவல் தொடர்பு போன்றவை தெளிவாக உள்ளது. திறமையைப் பொறுத்தவரை நான் எதுவும் விவாதிக்க முடியாது. ஒரு சாம்பியன் அணி ஒவ்வொரு ஆட்டத்திலும் முன்னேறிச் செல்ல விரும்பும். நாங்கள் இன்றைய ஸ்கோரை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். அணியில் வெளியே சென்று நீங்கள் விளையாட வேண்டிய வழியில் விளையாட சிறிது சுதந்திரம் உள்ளது. உலகக்கோப்பை அதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு, நாங்கள் இதே நிலையில் தொடர்ந்து செயல்பட விரும்புகிறோம். இதன் அடிப்படையில் கட்டமைக்க விரும்புகிறோம், சில நேரங்களில் விஷயங்கள் நடைபெறாமல் போகலாம். ஆனால் அது கவலை இல்லை” என கூறி இருக்கிறார்.

- Advertisement -