3-0 சொந்த மண்ணில் மாஸ் காட்டிய ரோஹித் அணி.. கில் அபார சதம்.. 142 ரன்னில் சாதனை வெற்றி.. இங்கி 3வது ஒருநாள்

0
199

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது.

- Advertisement -

இந்தியா இங்கிலாந்து 3வது ஒருநாள்

இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றிய நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இங்கிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெறும் நோக்கில் டாஸ் வென்று பந்து வீச தீர்மானித்தது. இதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் களம் இறங்கினார்கள். கடந்த போட்டியில் சதம் அடித்து சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா இந்த போட்டியில் தான் சந்தித்த இரண்டாவது பந்தியிலேயே மார்க் வுட் பந்துவீச்சில் வெளியேறினார்.

அதற்குப் பின்னர் ஜோடி சேர்ந்த கில் விராட் கோலி உடன் பாட்னர்ஷிப் அமைத்து இரண்டாவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் குவித்தனர். இதில் விராட் கோலிக்கு இரண்டு முறை அவுட் செய்யும் வாய்ப்பை இங்கிலாந்து வீரர்கள் தவறவிட்டனர். சிறப்பாக விளையாடிய விராட் கோலி 5 ரன்னில் வெளியேற, அவருக்கு பின்னால் வந்த ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக விளையாடி 64 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸ் என 78 ரன்கள் குவித்தார். இதில் சிறப்பாக விளையாடிய கில் 102 பந்துகளை எதிர் கொண்டு 112 ரன்கள் குவித்தார். இதில் 14 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

- Advertisement -

இந்திய அணி சாதனை வெற்றி

அதற்குப் பின்னர் இறுதிக்கட்டத்தில் வந்த கேஎல் ராகுல் 40 ரன்கள் குவிக்க இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெடுகளையும் இழந்து 356 ரன்கள் குவித்தது. இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் பென் டக்கட் 34 ரன்கள் மற்றும் பில் சால்ட் 23 ரன்கள் என விளையாடிக் கொண்டிருந்த போது இருவரையும் அர்ஸ்தீப் சிங் வீழ்த்தினார்.

இதையும் படிங்க:ரோகித் கம்பீர் துபாய் ஆடுகளத்தை தவறாக கணித்தார்களா?. பாக் அணி பக்காவா இருக்கு.. உதாரணம் காட்டும் பார்த்தீவ் பட்டேல்

அதற்குப் பிறகு டாம் பன்டன் 38 ரன்கள் மற்றும் ஜோ ரூட் 24 ரன்களில் வெளியேற, கேப்டன் ஜாஸ் பட்லர் 6 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். அதற்குப் பின்னர் இறுதிக்கட்டத்தில் கஸ் அட்கின்சன் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 38 ரன்கள் குவித்து வெளியேற, இறுதியாக இங்கிலாந்து அணி 34.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 214 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் 142 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி சாதனை வெற்றியை படைத்தது. ஏற்கனவே 2008 ஆம் ஆண்டு ராஜ்கோட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 158 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது 142 ரன்கள் வெற்றி பெற்றிருப்பது இந்தியாவின் இரண்டாவது அதிகபட்ச வெற்றியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -