இந்திய கிரிக்கெட்

வீரர்களை அங்க இருந்துதான் கொண்டு வரணும்.. ஆனா மேட்ச்ல இதை செய்யாம தப்பு பண்ணிட்டோம் – ரோகித் சர்மா கருத்து

இலங்கை அணி இந்திய அணிக்கு எதிராக 27 வருடங்கள் கழித்து ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வென்றிருக்கிறது. இன்று நடைபெற்ற தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது போட்டியில் 110 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை இலங்கை அணி தோற்கடித்தது. இந்த தோல்விக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மா சில விஷயங்களை குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது நடைபெற்ற முடிந்திருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முழுவதுமாக கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இந்த மைதானத்தின் ஆடுகளம் முழுக்க சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. மேலும் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு மிகவும் சவாலான சூழ்நிலை காணப்பட்டது.

இந்த தொடரின் மூன்று போட்டியுமே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் போன்ற காரணத்தினால் இரண்டாவது பேட்டிங் செய்ய வேண்டிய நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி கண்டிஷன் தெரிந்த காரணத்தினால் தேவையான ஸ்கோர்க்கு மட்டுமே விளையாடி புத்திசாலித்தனமாக ரன்கள் சேர்த்தது.

அதே சமயத்தில் இந்திய அணி கண்டிஷன் பழக்கம் இல்லாத காரணத்தினால் அதிரடியாக விளையாடவும், அடுத்து பந்து தேய்ந்து சொல்ல ஆரம்பித்ததும் எப்படி விளையாடுவதும்? எனத் தெரியாமல் சிக்கி தோல்வியடைந்து இருக்கிறது. முன்னணி வீரர்கள் கொண்ட அணி இலங்கை அணி இடம் அடைந்திருக்கும் தோல்வி இந்திய கிரிக்கெட்டில் விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசும்பொழுது “எங்களுக்கு வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவது மிகவும் முக்கியமானது. ஏனென்றால் நாங்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படும் வீரர்களைத்தான் இந்திய ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் சேர்க்கிறோம். எங்கள் உள்நாட்டு கிரிக்கெட் எங்களின் இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பாக இருந்து வருகிறது.

இதையும் படிங்க : இவர் இல்லாம விளையாடி எப்படி ஜெயிப்பிங்க?.. கம்பீர் உங்களால டீமை உருவாக்கவே முடியாது – இந்திய முன்னாள் வீரர் விமர்சனம்

நாங்கள் துணிச்சலான கிரிக்கெட்டை விளையாடவில்லை என்று சொல்லுவேன். குறிப்பாக எங்கள் பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக இன்னும் தாக்குதல் பாணியில் விளையாடி இருக்க வேண்டும். மேலும் நாங்கள் எல்லா வகையான சூழ்நிலையிலும் சிறப்பாக விளையாடும் அணியாகவே இருக்க விரும்புகிறோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: Rohit sharma

Recent Posts