இவர் இல்லாம விளையாடி எப்படி ஜெயிப்பிங்க?.. கம்பீர் உங்களால டீமை உருவாக்கவே முடியாது – இந்திய முன்னாள் வீரர் விமர்சனம்

0
1713
Gambhir

இன்று இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்திருக்கிறது. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் டோட்டா கணேஷ் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

இன்றைய போட்டியிலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வெல்லவில்லை. முதலில் பேட்டிங் செய்யும் அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ள நிலையில் இலங்கை கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இலங்கை அணியில் ஒரே ஒரு மாற்றமாக அகில தனஞ்செய இடத்தில் தீக்சனா இடம் பெற்றார்.

- Advertisement -

இந்திய அணியில் இரண்டு மாற்றம் செய்து கேஎல்.ராகுல் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங் இருவர் நீக்கப்பட்டு அவர்களுடைய இடத்தில் ரியான் பராக் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் சேர்க்கப்பட்டார்கள். இந்த நிலையில் தான் இந்த தேர்வு தற்பொழுது மிகவும் சர்ச்சையான ஒன்றாக மாறியிருக்கிறது.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி பொறுமையாக விளையாடிய 50 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 26.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணி 27 வருடத்திற்கு பிறகு இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது.

- Advertisement -

இந்த நிலையில் கே எல் ராகுலை மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கியது குறித்து பேசி உள்ள டோட்டா கணேஷ் கூறும்பொழுது “ஒரு பைத்தியக்கார உலகத்தில் மட்டுமே கேஎல்.ராகுல் விளையாடும் இடத்தில் சிவம் துபே மற்றும் ரியான் பராக் போன்றவர்கள் விளையாடுவார்கள். இந்திய அணியில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை. கேஎல் ராகுல் முன்பு இந்திய ஒருநாள் அணியை வழி நடத்தினார். திடீரென ஒரு தோல்வி வந்ததும் அவர் இந்திய அணியின் பிளேயிங் லெவனிலேயே இல்லை.

கடந்த ஆண்டு பெரிய அளவில் வெற்றி பெற்ற ஒரு வீரரை சிறிய தொழில்நுட்ப ரீதியான தோல்விக்கு பிறகு நீக்குவது, அது வீரர்களிடையே பாதுகாப்பற்ற ஒரு உணர்வை உருவாக்குகிறது. இப்படி எல்லாம் செய்தால் ஒரு அணியை உருவாக்கவே முடியாது. அந்த போட்டியில் இந்தியா தோற்கும் என்று யார் நினைத்திருக்க முடியும்? என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

இதையும் படிங்க : 110 ரன் வெற்றி.. நாங்க செஞ்சது இதைத்தான்.. அதனாலதான் இந்திய அணியை தோற்கடிக்க முடிந்தது – வெல்லால்கே பேட்டி

தற்பொழுது இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி இழந்து இருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் பெரிய அளவில் கோபப்படுத்தி இருக்கிறது. இது குறித்து இந்திய ரசிகர்கள் மிகக் கடுமையாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

- Advertisement -