இந்திய கிரிக்கெட்

நான் 40 ஓவர் பத்தி யோசிச்சேன்.. இலங்கை பேட்டிங்கில வித்தியாசமா இதை செஞ்சாங்க – ரோகித் சர்மா தெளிவான பதில்

இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் இலங்கை எதிராக 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்திருக்கிறது. இந்த நிலையில் இறுதியாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா தாங்கள் தொடரில் செய்த முக்கிய தவறுகள் என்ன? என்பது குறித்து விளக்கமாகக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சுழல் பந்துவீச்சுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்களின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இதுவரையில் சுழல் பந்துவீச்சுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் ஒரு தொடரில் இல்லாத அளவுக்கு அதிக விக்கட்டுகளை கொடுத்து இருக்கிறார்கள்.

முதல் போட்டியை தட்டுத்தடுமாறி டிரா செய்த இந்திய அணி அதற்கு அடுத்து இரண்டு போட்டிகளிலும் சுதாரிக்கும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் இந்திய பேட்ஸ்மேன் களின் செயல்பாடு மிகவும் மோசமானதாகவே மாறி வந்தது. அதே சமயத்தில் இலங்கை பேட்ஸ்மேன்களின் செயல்பாடு சிறப்பானதாக மாறியது.

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கூறும் பொழுது “முடிந்தவரை நான் ரன்கள் எடுப்பதே என்னுடைய நோக்கமாக இருந்தது. பவர் பிளேவுக்கு பிறகு நான் என்னுடைய விக்கெட்டை தூக்கி எறிய வேண்டும் என்று நினைக்கவில்லை. நான் என்ன வேகத்தில் இருந்தேனோ அதையும் என்னுடைய இன்டென்டையும் தொடர விரும்பினேன். ஆனால் துரதிஷ்டவசமாக சில ஷாட் விளையாடும் பொழுது நான் ஆட்டம் இழந்தேன். என்னுடைய ஆட்டம் முறை மிகவும் வெளிப்படையானது நேரானது.

- Advertisement -

பவர் ப்ளேவில் அடிக்கப்படும் ரன்கள் மிக முக்கியமானது. அதற்குப் பிறகு பந்து தேய்ந்து ரன்கள் எடுப்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறும். எனவே நான் அடுத்த 40 ஓவர்கள் வரக்கூடிய பேட்ஸ்மேன்கள் விளையாடுவதற்கு தேவையான ரன்களை பவர் பிளேவில் எடுப்பதற்கு முயற்சி செய்தேன். மேலும் முதல் பத்து ஓவருக்கு பிறகு நான்கு பீல்டர்கள் வெளியில் செல்வார்கள். நான் இதையும் பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன்.

நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு இலங்கை பேட்ஸ்மேன்கள் கால்களை பயன்படுத்தி விளையாடவில்லை. அதே சமயத்தில் அவர்கள் தங்கள் எதிர்பார்க்காதபடி ஸ்வீப் ஷாட் விளையாடினார்கள். டீப் ஸ்கொயர் லெக் மற்றும் மிட் விக்கெட் திசைகளை பயன்படுத்தி விளையாடினார்கள். ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் செய்ய தவறிய ஒன்று இதுதான். நாங்கள் போதுமான அளவுக்கு ரிவர்ஸ் ஸ்வீப் மற்றும் ஸ்வீப் ஷாட்கள் ஆடவில்லை.

இதையும் படிங்க : ஸ்ரேயாஸ் ஐயரை விட அவர் 1000 மடங்கு சிறந்த வீரர்.. அவரை எடுக்காதது பெரிய தப்பு – பாக் பசித் அலி விமர்சனம்

ஒட்டு மொத்தமாக நாங்கள் எங்கு தவறு செய்தோம் என்பதை ஏற்றுக் கொண்டு ஒத்துக் கொள்ள வேண்டும். சுழல் பந்துவீச்சுக்கு எதிராக நாங்கள் ஆதிக்கம் செலுத்தவில்லை. இது போன்ற ஆடுகளங்களில் நீங்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டும். மேலும் மூன்று போட்டிகளிலும் இலங்கை சுழல் பந்துவீச்சாளர்கள் எங்களை அழுத்தத்தில் வைத்திருந்தார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: Rohit sharma