இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருந்த இந்திய அணி முதலில் டி20 தொடரை சூர்யா குமார் யாதவ் தலைமையில் வென்று அடுத்து ரோகித் சர்மா தலைமையில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை தோற்று அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியில் குறிப்பிட்ட இரண்டு வீரர்களை சேர்த்து இருக்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டில் தற்போது நிறைய இளம் வீரர்கள் திறமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதன் காரணமாக இந்திய தேர்வாளர்களுக்கு மிகப்பெரிய தலைவலி. டி20 கிரிக்கெட்டில் கில்லை விட மிகச் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் சேர்க்கப்படவில்லை.
இதேபோல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் சதம் அடித்திருந்த சஞ்சு சாம்சன் இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தேர்வு செய்யப்படவில்லை. மேலும் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் வடிவத்தில் துவக்க வீரராக மிகச் சிறப்பாக விளையாடும் ஜெய்ஸ்வால் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு தேர்வு செய்யப்படவில்லை.
இப்படி இந்திய கிரிக்கெட் அணிக்கான தேர்வில் முன்னுக்குப் பின் முரணான விஷயங்கள் நிறைய இருந்து வருகின்றன. தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இடங்களில் வேறு இரண்டு வீரர்களை தேர்ந்தெடுத்து இருக்க வேண்டும் என விமர்சனம் செய்திருக்கிறார்.
இதுகுறித்து பசித் அலி கூறும் பொழுது “இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே கில்லை விட ஜெய்ஸ்வால் சிறந்த வீரர் என்று எனக்கு தெரியும். ஆனால் மக்கள் இந்த தொடருக்குப் பிறகு இதை புரிந்து கொண்டிருக்கிறார்கள். தேர்வுக்குழு ஜெய்ஸ்வாலை தேர்ந்தெடுக்காமல் பெரிய தவறு செய்திருக்கிறது. மேலும் அவர்கள் சூரிய குமாரையும் தேர்வு செய்யவில்லை. இன்னும் ஆறு மாதத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வர இருக்கிறது. இந்திய அணிக்கு மூன்று ஒரு நாள் போட்டி மட்டுமே இருக்கிறது. இந்த நிலையில் இவர்கள் இப்பொழுதே விளையாடி இருக்க வேண்டுமா இல்லை உள்நாட்டு கிரிக்கெட்டில் போய் விளையாட வேண்டுமா?
இதையும் படிங்க : கடைசியா எப்போனு தெரியல.. ஆனா தொடர்ந்து 3 தடவ விராட் கோலிக்கு இப்படி ஆவது இப்பதான் பார்க்கிறேன் – ஆகாஷ் சோப்ரா பேட்டி
கில்லுடன் ஜெய்ஸ்வாலுக்கு எந்த போட்டியுமே கிடையாது. இதை என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். அதே சமயத்தில் ஸ்ரேயாஸ் ஐயரின் சராசரி 48 ஆக ஒருநாள் கிரிக்கெட்டில் இருக்கிறது. இருந்த போதிலும் கூட இவரை விட சூரியகுமார் யாதவ் ஆயிரம் மடங்கு சிறந்த வீரர். அவர் சுழல் பந்து வீச்சுக்கு எதிராக ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் சிறப்பாக விளையாடக் கூடியவர். இலங்கைக்கு எதிராக விளையாடி இருந்தால் அவர் சுழல் பந்துவீச்சாளர்களை எளிதாகச் சமாளித்து இருப்பார். மேலும் ஜெய்ய்வாலும் சுழல் பந்துவீச்சாளர்களை சிறப்பாக சமாளிப்பார்” என்று கூறியிருக்கிறார்.






