இந்திய கிரிக்கெட்டில் சச்சினுக்கு பிறகு வயதாக வயதாகத் தொடர்ந்து சிறப்பாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன் ஆக இந்திய கேப்டன் ரோகித் சர்மா மாறி வருகிறார். இந்த நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றிருப்பது சரியான முடிவு கிடையாது என பல முன்னாள் வீரர்களும் கூறுகிறார்கள். இந்த நிலையில் ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய ஓய்வு எப்பொழுது என அவர் பேசியிருக்கிறார்.
2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்த பொழுது, அப்போது கேப்டன் ரோகித் சர்மா மொத்த அணியும் இனி விக்கெட்டை பற்றி கவலைப்படாமல் விளையாடினால் மட்டுமே உலகக் கோப்பையை இந்திய அணியால் நினைத்துப் பார்க்க முடியும் என்று தினேஷ் கார்த்திக்கிடம் பேசி இருந்ததாக தினேஷ் கார்த்திக் கூறியிருந்தார்.
இதற்குப் பிறகு ரோகித் சர்மா உட்பட அணியில் உள்ள எல்லோரும் அரை சதம் மற்றும் சதம் விக்கெட் என எதைப் பற்றியும் கவலைப்படாமல் விளையாட ஆரம்பித்தார்கள். 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தானே துவக்க வீரராக வந்து இதை மிகச் சிறப்பாக ரோகித் சர்மா செய்து காட்டினார்.
மேலும் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் அவரே அதிக ரன்கள் அடித்தவராகவும் இந்திய அணிக்கு இருக்கிறார். மேலும் அதிக சிக்சர் அதிக பவுண்டரி மற்றும் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய வீரராக நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா தனி வீரராக தெரிந்தார்.
இந்த நிலையில் மற்ற இரண்டு வடிவங்களில் தன்னுடைய ஓய்வு குறித்து பேசி இருக்கும் போது சர்மா கூறும் பொழுது ” நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிவிட்டேன். நான் சீக்கிரம் கிரிக்கெட்டை விட்டு ஓய்வு பெற மாட்டேன். எனவே நீங்கள் நான் விளையாடுவதை இன்னும் அதிக நாட்களுக்கு பார்க்கலாம்” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க : 225 ஸ்ட்ரைக் ரேட்.. தனியாளாக பேட்டிங்கில் போராடிய அஸ்வின்.. 4 ஓவரில் மேட்சை முடித்த சேப்பாக்.. திண்டுக்கல் தோல்வி
மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட் ஓய்வை அறிவித்து ரோகித் சர்மா பேசியிருந்த பொழுது “ஓய்வு பெறுவதைப் பற்றி நான் யோசிக்கவே இல்லை. வாழ்க்கை இங்கு அழைத்துச் செல்லும் என்றும் தெரியவில்லை.தற்போதுநான் நன்றாக விளையாடி வருகிறேன். எனவே நான் சில வருடங்கள் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். வெளிப்படையாக நான் உலக கோப்பையை வெல்லவும் விரும்புகிறேன். இத்தோடு அடுத்த வருடத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வருகிறது. நாங்கள் அதை வெல்வோம் என்று நம்புகிறேன்” என்று கூறியிருந்தார். 2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாட ரோகித் சர்மா திட்டமிட்டு இருக்கிறார் என்று தெரிய வருகிறது.