இங்கி பவுலர்ஸ் எனக்கு குறி வெச்சாங்க.. அந்த திட்டத்தை இப்படித்தான் உடைத்தேன் – ரோஹித் சர்மா பேட்டி

0
955

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்து தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணி வெற்றி பெற்ற விதம் குறித்து கேப்டன் ரோஹித் சர்மா சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி சிறப்பான வெற்றி

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 304 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்கள் மற்றும் தொடக்க வீரர் பென் டக்கட் 65 ரன்கள் குவித்தனர். இதில் பந்துவீச்சில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது.

முதல் போட்டியில் சிறப்பாக விளையாடத் தவறிய ரோஹித் சர்மா இந்த முறை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடக்கம் முதலே அவர் அதிரடியாக விளையாடிய நிலையில் 90 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸ் என 119 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். மேலும் மற்ற வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 44.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் குவித்து சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

அதை உடைக்க விரும்பினேன்

இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும் பொழுது “இந்த உணர்வு நன்றாக இருக்கிறது, அணிக்காக சில ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் நெருங்கி வரும் நிலையில் இது முக்கியமான ஆட்டம். நான் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை இந்தப் போட்டியில் பகுதி பகுதியாக பிரித்தேன். டி20 போட்டியை விட நீளமானது டெஸ்ட் போட்டியை விட குறுகியது என்றாலும் அதனை நான் உடைக்க விரும்பினேன். எனது கவனம் ஆரம்பத்தில் இருந்தே நீண்ட இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என்பதுதான். கருப்பு மண் கொண்ட ஆடுகளத்தில் விளையாடும் போது அது சற்று சறுக்கி விடும்.

இதையும் படிங்க:308 ரன்.. அபார சேசிங்.. கேப்டனாக ரோஹித் சர்மா சாதனை.. 2வது ஒருநாள்.. தோல்வியில் இங்கி அணி மோசமான சாதனை

அப்போது பேட்டின் முழு முகத்தையும் காட்ட வேண்டும். பந்து வீச்சாளர்கள் உடலை நோக்கி ஸ்டம்பை குறி வைத்து வீசினார்கள். அங்கு தான் எனது திட்டத்தை தயாரித்து இடைவெளிகளை அணுக முயற்சித்தேன். மேலும் கில் மற்றும் ஸ்ரேயாசிடமிருந்து நல்ல ஆதரவு கிடைத்தது. கில் எதைப்பற்றியும் அதிகம் கவலைப்படுவதாக தெரிவதில்லை. அவர் பேட்டிங்கை அனுபவித்து விளையாடட்டும், நான் தவறாக நினைக்கவில்லை. ஆனால் மிடில் ஓவர்களை நீங்கள் இறுக்கமாக விளையாடினால் வெற்றி பெறுவது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. ஒரு வீரராகவும் அணியாகவும் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -