இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி கட்டாக்கில் உள்ள பாராபதி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி ரோகித் சர்மாவின் சதத்தின் உதவியோடு சிறப்பாக விளையாடி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்தியா இங்கிலாந்து 2வது ஒருநாள்
இந்த போட்டியில் டாசை இழந்து முதலில் இந்திய அணி பீல்டிங் செய்தது. இதன்படி இங்கிலாந்து அணியின் இன்னிங்சை சால்ட் மற்றும் பென் டக்கட் ஆகியோர் தொடங்கினார்கள். தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.5 ஓவர்களில் 81 ரன்கள் குவித்தது. இதில் சால்ட் 26 ரன்னில் அறிமுக வீரர் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து டக்கட் 65 ரன்னில் ஜடேஜாவின் பந்துவீச்சில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அதற்கு பின்னர் களம் இறங்கிய ரூட் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாட, மறுமுனையில் களம் இறங்கிய வீரர்கள் தங்களது பங்குக்கு அதிரடியாக விளையாடிவிட்டு சென்றனர். இங்கிலாந்து அணியில் மிடில் வரிசையில் அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 32 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் 72 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 69 ரன்கள் குவித்ததால் இங்கிலாந்து அணி 49.5 ஓவரில் 304 ரன்கள் குவித்தது.
இந்திய அணி அபார வெற்றி
இதில் பந்துவீச்சில் ஜடேஜா 3 விக்கட்டுகள் கைப்பற்றினார். அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தனது அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். தொடக்க ஆட்டக்காரர் கில் 60 ரன்னில் வெளியேற, ரோஹித் சர்மா பௌண்டரி மற்றும் சிக்ஸர் என இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை துவைத்தார். மறுமுனையில் விராட் கோலி 5 ரன்னில் வெளியேறினாலும் ஸ்ரேயாஸ் ஐயர் ரோஹித் உடன் நன்றாக பாட்னர்ஷிப் அமைத்தார். 30 பந்துகளில் அரை சதம் அடித்த ரோகித் சர்மா இறுதியாக 90 பந்துகளில் 12 பௌண்டரி மற்றும் 7 சிக்ஸ் என 119 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க:யோசிக்க கூட நேரமில்ல.. 50 ஓவர் உலக கோப்பையை விட இது ரொம்ப கஷ்டமா இருக்கு – தென்னாப்பிரிக்க கேப்டன் ஆதங்கம்
இவரது அபார ஆட்டத்தின் மூலமாக இந்திய அணி வெறும் 44.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் குவித்து 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பாக வெற்றியை பதிவு செய்து தொடரையும் கைப்பற்றியுள்ளது. இதன் மூலமாக ரோகித் சர்மா கேப்டனாக 50 ஒரு நாள் போட்டிகளுக்குப் பிறகு 36 போட்டிகளில் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் உடன் வெற்றியை பகிர்ந்திருக்கிறார். மேலும் இங்கிலாந்து அணி 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்குப் பிறகு தொடர்ச்சியாக நான்காவது தோல்வியை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 300 ரன்கள் குவித்த 99 போட்டிகளில் இங்கிலாந்து 28 போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கிறது.