ரோகித் சர்மா தந்த தெறி நியூஸ்.. காத்திருக்கும் கொண்டாட்டம்.. இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி

0
1231
Rohit

உலகிலேயே அதிக கிரிக்கெட் ரசிகர்களை கொண்டிருக்கும் நாடாக இந்தியா இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 13 வருடங்களாக உலகக் கோப்பை தொடரை வெல்லாமல் வறட்சி காணப்பட்டது. தற்போது டி20 உலகக் கோப்பை தொடரை வென்று அந்த வறட்சிக்கு முடிவு கட்டப்பட்டு இருக்கிறது. இந்த வெற்றிக்கான புது கொண்டாட்டம் குறித்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா புது அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

இந்திய அணி கடந்த வாரம் சனிக்கிழமை பார்படாஸ் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 உலகக் கோப்பை தொடரை இரண்டாவது முறையாக கைப்பற்றியது.

- Advertisement -

இதற்கான வெற்றி கொண்டாட்டங்கள் இந்தியாவில் நடைபெறுவது பார்வர்ட் ஆசில் ஏற்பட்ட சூறாவளியின் காரணமாக தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. வீரர்கள் நாடு திரும்புவது தாமதமானது. இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் அவர்களை தனி விமானத்தில் அழைத்து வருவதற்கு ஏற்பாடுகள் செய்தது.

இந்த நிலையில் இன்று இந்திய வீரர்கள் இந்தியாவிற்கு வந்து சேர்ந்து விடுவார்கள் என்று தெரிகிறது. நீண்ட வருடம் கழித்து உலகக் கோப்பையை வென்று இருக்கின்ற காரணத்தினால், இதற்கான வெற்றி கொண்டாட்டங்கள் இந்தியாவில் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள்.

- Advertisement -

தற்போது இதற்கு பதில் அளிக்கும் விதமாக கேப்டன் ரோஹித் சர்மா புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிவிப்பில் “இந்த சிறப்பான தருணத்தை நாங்கள் உங்களுடன் அனுபவிக்க விரும்புகிறோம். எனவே இந்த வெற்றியை நாளை மாலை 5 மணி அளவில் மும்பை மெரின் டிரைவ் மற்றும் வான்கடேவில் நடைபெறும் வெற்றி அணிவகுப்புடன் கொண்டாடுவோம். உலகக் கோப்பை நாட்டிற்கு வருகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க : விராட் கோலி இருக்கட்டும்.. இந்த பட்டம் பும்ராவுக்குதான்.. அவர் கேப்டனின் கனவு – தினேஷ் கார்த்திக் பேட்டி

ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியினர் நாளை வான்கடேவில் மாலை 5 மணி அளவில் ரசிகர்களுடன் சேர்ந்து வெற்றியை கொண்டாட இருக்கிறார்கள். இந்தியாவில் ஒரு உலகக்கோப்பைக்கு எவ்வளவு வரவேற்பு இருக்கும் என்பது நாளை கிரிக்கெட் உலகத்திற்கு மீண்டும் தெரியும்!

- Advertisement -