விராட் கோலி இருக்கட்டும்.. இந்த பட்டம் பும்ராவுக்குதான்.. அவர் கேப்டனின் கனவு – தினேஷ் கார்த்திக் பேட்டி

0
104
DK

இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலியின் சிறப்பு அவர் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடக் கூடியவர் என்பதுதான். அவருடன் ஒப்பிடப்பட்ட எல்லா வீரர்களும் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு வடிவத்தில் மட்டுமே குறிப்பிட்ட காலத்தில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். இந்த நிலையில் விராட் கோலியை தாண்டி இது முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் ஒருவரைப் பாராட்டி இருக்கிறார்.

நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக விராட் கோலி இறுதி போட்டி வரையில் சிறப்பாக விளையாடவில்லை. ஆனால் இறுதிப் போட்டியில் விராட் கோலி இந்திய அணியின் அதிகபட்ச ரன் அடித்தவராக வந்து, இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

- Advertisement -

இந்திய முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சிந்து இந்த உலகக் கோப்பைத் தொடர் துவங்குவதற்கு முன்னால் விராட் கோலியை இந்தியாவின் கோஹினூர் வைரம் என்று பாராட்டி இருந்தார். இந்தியாவுக்கு வெளியே கோஹினூர் வைரம் இருக்கிறது, ஆனால் இந்தியாவில் விராட் கோலி இருக்கிறார் என்று புகழ்ந்து பேசி இருந்தார்.

இந்த நிலையில் நவ்ஜோத் சிங் சித்து விராட் கோலியை பாராட்டியதற்கு அப்படியே மாற்றாக இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய வேத பந்துவீச்சாளர் ஜஸ்பரித் பும்ராவை பாராட்டியிருக்கிறார். அவரை ஒவ்வொரு கேப்டனின் கனவு வீரர் என்று புகழ்ந்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “நான் கிரிக்கெட் வர்ணனை செய்து கொண்டிருக்கும் பொழுதும் பும்ராவை கோஹினூர் வைரத்தை விட மதிப்பானவர் என்று சொன்னேன். உண்மையாகவே தற்போது உலக கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திலும் அவர்தான் சிறந்த வீரராக இருக்கிறார். அழுத்தத்தின் கீழ் இருந்து சிறப்பாக திரும்பி வந்து செயல்படுவது பலரால் முடியாத ஒன்று. அதை அவர் எப்பொழுதும் செய்கிறார்.

இதையும் படிங்க : உலக கோப்பை.. வீரர்கள் பதக்கத்தை கடித்து கொண்டாடுவது ஏன்?.. வரலாற்று உண்மை காரணம்

பும்ரா எல்லா கேப்டன்களும் விரும்பும் ஒரு கனவு வீரர். போட்டியில் எந்தக் கட்டத்திலும் வெற்றி பெறக் கூடியவர். இதுதான் அவரை சிறப்பு மிக்கவராக மாற்றுகிறது. அவருடைய புத்திசாலித்தனம் மிகவும் அற்புதமான ஒன்று. அவரைப் பற்றி இதுதான் கூற முடியும்” என்று பேசியிருக்கிறார்.

- Advertisement -