இந்திய டி20 அணி கேப்டனிடம் இந்திய கேப்டன் வீழ்ந்தார் ; மும்பையை எளிதாக வீழ்த்தியது குஜராத்!

0
2211
Ipl2023

ஐபிஎல் 16ஆவது சீசனில் இன்று அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். கடந்த போட்டியில் ஒரே ஓவரில் 31 ரன்கள் தந்து அர்ஜுன் டெண்டுல்கர் இந்த முறை இரண்டு ஓவர்கள் பந்து வீசி ஒன்பது ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து சகாவை நான்கு ரண்களில் வெளியேற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 13 ரன்களில் வெளியேறினார். விஜய் சங்கர் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மிகச் சிறப்பாக விளையாடிய இன்னும் ஒரு துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 34 பந்துகளில் ஏழு பவுண்டரி ஒரு சிக்ஸர் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் மற்றும் அபினவ் மனோகர் இருவரும் மிகச் சிறப்பான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அபினவ் மனோகர் 21 பந்தில் மூன்று சிக்சர் மற்றும் மூன்று பவுண்டரி உடன் 42 ரன்கள் எடுத்தார். டேவிட் மில்லர் 22 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 46 ரன்கள் எடுத்தார்.

ராகுல் திவாட்டியா ஆட்டம் இழக்காமல் ஐந்து பந்தில் மூன்று சிக்சர் உடன் 20 ரண்களும், ரஷித் கான் இரண்டு ரண்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்கள். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் பியூஸ் சாவ்லா நான்கு ஓவர்கள் பந்து வீசி 32 ரன்கள் தந்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

- Advertisement -

பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. ரோகித் சர்மா 2, இஷான் கிஷான் 13, திலக் வர்மா 2, கேமரூன் கிரீன் 33, டிம் டேவிட் 0, சூரியகுமார் 23, வதேரா 40, பியூஸ் சாவ்லா 18, அர்ஜுன் 13 ரன்கள் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணிக்கு 152 ரன்கள் 9 விக்கெட் இழப்புக்கு கிடைத்தது. இதன் மூலம் குஜராத் 55 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. குஜராத் தரப்பில் நூர் அகமது நான்கு ஓவர்கள் பந்துவீசி 37 ரன்கள் தந்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.