கம்பீர் பேசியதுதான் ரொம்ப சரி.. ரிக்கி பாண்டிங்க்கு எதிர்ப்பாக கிளம்பிய மைக்கேல் கிளார்க் – ஆதரவு பேட்டி

0
17
Clarke

இந்தியா அணியின் பயிற்சியாளர் கம்பீர் கொண்டிருக்கும் ஆக்ரோஷ அணுகுமுறை சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் சரியானது என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியிருக்கிறார்.

விராட் கோலி குறித்தான ரிக்கி பாண்டிங் பேச்சுக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் கம்பீர் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தார். கம்பீரின் இந்த பேச்சுக்கு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தரப்பில் இருந்தும் கூட எதிர்ப்புகள் வந்தது. ரிக்கி பாண்டிங் இந்திய கிரிக்கெட் பற்றி பேசக்கூடாது என கூற முடியாது என பலரும் கூறினார்கள்.

- Advertisement -

ரிக்கி பாண்டிங் வினை மற்றும் எதிர்வினை

ரிக்கி பாண்டிங் விராட் கோலி பேட்டிங் ஃபார்ம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், வேறு அணியாக இருந்தால் நீக்கி இருப்பார்கள் என்றும் கூறினார். மேலும் ஆஸ்திரேலியாவில் அவரால் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் சொல்லியிருந்தார். இந்த நிலையில் கம்பீர் ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை பற்றி மட்டுமே பேச வேண்டும் என பதிலளித்திருந்தார்.

இதற்கு திருப்பி பதில் அளித்து இருந்த ரிக்கி பாண்டிங் கம்பீர் முட்கள் போன்றவர். அவர் போன்ற ஒருவர் இப்படி பேசவில்லை என்றால்தான் ஆச்சரியம் அடைந்திருப்பேன் என்றார். மேலும் விராட் கோலியை தான் மோசமாக சொல்லவில்லை என்றும், அவருடைய பேட்டிங் ஃபார்ம் குறித்து அவருக்கே கவலையாகத்தான் இருக்கும் என்றும், அவரிடமே கேட்டுப்பாருங்கள் என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

விளையாடுவது ஐபிஎல் இல்லை

இது குறித்து மைக்கேல் கிளார்க் போகும்போது ” தற்போது சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் அதிகம் ஒன்று சேர்ந்து விளையாடுகிறார்கள். இதனால் அவர்கள் களத்தில் மோதிக் கொள்வது, ஆக்ரோஷமான அணுகுமுறையை கடைப்பிடிப்பது போன்றவை கடினமாக மாறிவிட்டது. ஆனால் நாங்கள் விளையாடிய காலத்தில் இப்படி கிடையாது. களத்தில் நண்பர்களாக யாரும் நாங்கள் இருக்கவில்லை. மேலும் இந்தியா இங்கு இரண்டு முறை வெற்றி பெற்று இருக்கிறது”

“ஆஸ்திரேலியாவிற்கு நுழையும் பொழுது நீங்க எல்லா அணியின் வீரர்களுக்கும் மனதில் ஒரு கோடு இருப்பதாக நான் நினைக்கிறேன். மைதானத்திற்குள் நாம் நண்பர்கள் கிடையாது வெளியில் நண்பர்களாக இருந்தால் நல்லது. ஏனென்றால் உங்கள் நாட்டிற்காக விளையாடுகிறீர்கள் ஐபிஎல் அணிக்காக விளையாடவில்லை”

இதையும் படிங்க : இந்திய அணிக்கு எதிரா தயாரா இருக்கோம்.. ஐபிஎல் எங்களை எதுவுமே செய்ய முடியாது – பேட் கம்மின்ஸ் பேட்டி

“ஆஸ்திரேலியாவும் ஆக்ரோஷ அணுகுமுறைதான் கொண்டிருக்கும். இது ஸ்லெட்ஜிங் செய்வது பற்றியது கிடையாது. இது அணி கொண்டிருக்கும் இன்டெண்ட் பற்றியது. இது உங்கள் அணிக்கு தேவையான பொழுது நம்பிக்கையை எடுத்துக் கொள்வது. ஆஸ்திரேலியா இப்படி இல்லை என்றால் நான் ஆச்சரியப்படுவேன். எனவே கம்பீரின் ஆக்ரோஷமான சுறுசுறுப்பான அணுகுமுறை சரியான ஒன்றுதான். ஏனென்றால் நாம் ஐபிஎல் தொடரில் இருக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -