ஹர்திக் பாண்டியா பவுலிங்கில்.. திருப்தி அடையாத கோச் மோர்னே மோர்கல்.. புது மாற்றங்கள் – வெளியான தகவல்கள்

0
395
Morkel

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு திரும்பி வந்திருக்கும் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் மகிழ்ச்சி அடையவில்லை என செய்திகள் கூறுகிறது.

தற்போது ஹர்திக் பாண்டியா இரண்டு மாதங்களுக்கும் மேலான ஒய்வில் இருந்து இந்திய அணிக்கு பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் திரும்பி இருக்கிறார். இந்த தொடர் நாளை மறுநாள் குவாலியர் மைதானத்தில் ஆரம்பிக்க இருக்கிறது.

- Advertisement -

பார்த்திவ் படேல் தெரிவித்த மறுப்பு

இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்தில் பயிற்சி செய்ததற்கான காரணம் அவருக்கு பயிற்சி செய்வதற்கு வெள்ளைப்பந்து கிடைக்கவில்லை என்று கூறி இருந்தார். மேலும் இதன் மூலமாக ஹர்திக் பாண்டியா இந்திய டெஸ்ட் கிரிக்கெட் திரும்புவார் என்று நினைக்க வேண்டாம் என்றும், அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இடம் பெற மாட்டார் என்றும் கூறியிருந்தார்.

இதே போல இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் ஹர்திக் பாண்டியாவின் உடல் குறித்து தனக்கு நன்றாக தெரியும் எனவும், எனவே அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பினால் தான் மிகவும் ஆச்சரியப்படுவேன் என்றும் கூறி இருந்தார். இதன் மூலம் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கான உடல் தகுதியில் இல்லை என்று தெரிய வருகிறது.

- Advertisement -

மோர்னே மோர்கல் மகிழ்ச்சி அடையவில்லை

இந்த நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான பயிற்சியில் ஹர்திக் பாண்டியா ஈடுபட்டிருக்கிறார். இதில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சு பயிற்சி செய்த பொழுது அவர் ஸ்டெம்புக்கு நெருக்கமாக வீசிய பந்துகளில் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் அதிருப்தி அடைந்திருக்கிறார்.

இதையும் படிங்க : தோனி கிடையாது.. விராட் கோலி பற்ற வைத்த அந்த நெருப்புதான்.. காபாவில் கில் ரிஷப் சாதிக்க காரணம் – ஹர்பஜன் சிங் பேட்டி

மேலும் ஹர்திக் பாண்டியா வீசும் ஒவ்வொரு பந்துக்கும் மோர்னே மோர்கல் அவருக்கு சில ஆலோசனைகளை கூறிக் கொண்டே வந்திருக்கிறார். இத்துடன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சின் ரிலீஸ் பாயிண்ட் மாற்றி அமைக்க மோர்னே மோர்கல் அறிவுரை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் நிறைய மாற்றம் தேவைப்படுவதால் மோர்னே மோர்கல் திருப்தி அடையவில்லை என்று தெரிகிறது.

- Advertisement -