முதல் டெஸ்டில் கில் விளையாடுவாரா? விராட் கோலியால் இந்த நன்மையும் இருக்கு – மோர்னே மோர்கல் பேட்டி

0
123
Morkel

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் விளையாடுவாரா என்பது குறித்து இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் நம்பிக்கையான பதில் அளித்திருக்கிறார்.

நாளை மறுநாள் மேற்கு ஆஸ்திரேலியா பெர்த் மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி துவங்க இருக்கிறது. இதற்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி அமையும்? என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணிக்கு ஏற்பட்ட காயங்கள்

முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பயிற்சி முகாமில் கேஎல்.ராகுல் முதல் நாளிலேயே கடுமையாக காயப்பட்டு வெளியேறினார். இவருக்கு முன்பாகவே சர்ஃப்ராஸ் கான் முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கில்லுக்கு ஃபீல்டிங் செய்யும் பொழுது விரலில் காயம் ஏற்பட்டு மோசமான நிலைக்கு சென்றது.

அடுத்து மிக முக்கியமாக விராட் கோலி ஆஸ்திரேலியாவில் ஸ்கேன் செய்த உறுதிப்படுத்தப்பட்ட செய்தி வெளியானது. மேலும் அவர் என்ன காயத்திற்காக ஸ்கேன் செய்தார்? என்பது குறித்தான விவரங்கள் எதுவும் வெளியில் வரவில்லை. ஆனால் அவர் தொடர்ந்து இந்திய அணியின் எல்லா பயிற்சி அமர்வுகளிலும் கலந்து கொண்டு விளையாடுகிறார். எனவே அவர் தற்போது காயத்தில் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

- Advertisement -

முதல் டெஸ்டில் கில் விளையாடுவாரா?

இது குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் கூறும் பொழுது “கில் தற்பொழுது கைவிரலில் ஏற்பட்டிருக்கும் காயத்தில் இருந்து நாளுக்கு நாள் முன்னேறி வந்து கொண்டிருக்கிறார். எனவே தற்போது அவர் முதல் டெஸ்டில் இருந்து ரூல்டு அவுட் செய்யப்படவில்லை. நாங்கள் போட்டி நடைபெறும் நாளில் அது குறித்து முடிவெடுப்போம். எனவே தற்போது அவர் விஷயத்தில் முன்பு போல் பின்னடைவாக எதுவும் இல்லை” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : ஐபிஎல் மெகா ஏலத்தை இப்படி நடத்தறது சரியில்ல.. இதுக்கு பின்னாடி இந்த காரணம் இருக்கு – ரிக்கி பாண்டிங் அதிருப்தி

மேலும் அவர் விராட் கோலி பற்றி கூறும்பொழுது “விராட் கோலியின் தீவிரம் மற்றும் தொழில் முறை திறன் மிகவும் சிறந்தது. எங்கள் அணியின் இளைஞர்கள் அதை பார்க்கும் பொழுது, அது அவர்களின் ஆட்டத்தை வேறு நிலைக்கு கொண்டு செல்வதற்கு பயன்படுகிறது. விராட் கோலி அணியில் எல்லா விதத்திலும் உதவியாக இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -