ஐபிஎல் மெகா ஏலத்தை இப்படி நடத்தறது சரியில்ல.. இதுக்கு பின்னாடி இந்த காரணம் இருக்கு – ரிக்கி பாண்டிங் அதிருப்தி

0
89
Ponting

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் நேரத்தில் மெகா ஏலம் நடத்தப்படுவது தொடர்பாக ரிக்கி பாண்டிங் தன்னுடைய அதிருப்தியை தெரிவித்து பேசி இருக்கிறார்.

இந்த முறை ஐபிஎல் மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25ஆம் தேதியில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடக்கிறது. அதே சமயத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி மைதானத்தில் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது.

- Advertisement -

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களுக்கான நெருக்கடி

இதன் காரணமாக தற்போது நடைபெறும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் தொலைக்காட்சி வர்ணனையாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் ரிக்கி பாண்டிங் மற்றும் ஜஸ்டின் லாங்கர், மேலும் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் டேனியல் வெட்டேரி ஆகியோர் சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

ரிக்கி பாண்டிங் பஞ்சாப் கிங்ஸ், ஜஸ்டின் லாங்கர் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் டேனியல் வெட்டேரி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு தலைமை பயிற்சியாளர்களாக இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவர்கள் ஐபிஎல் மெகா இடத்தில் தங்கள் அணிக்காக கலந்து கொள்ள வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. அதே சமயத்தில் தனிப்பட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர் வேலைகளும் இருக்கிறது.

- Advertisement -

இதற்குப் பின்னணி காரணம் இதுதான்

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவிக்கும் பொழுது “எனக்கும் லாங்கருக்கும் இது மிகவும் மோசமான சூழ்நிலை. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்து நாங்கள் இருவரும் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு நடுவில் இருக்கும் இடைவெளியில் ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்படும் என்று நம்பி வந்தோம். மேலும் இப்படி நடத்துவதின் மூலமாக இரு அணி வீரர்களின் மீதி இருக்கும் அழுத்தமும் ஐபிஎல் தொடர்பாக நீங்கும். ஏனென்றால் இரு அணிகளில் இருந்தும் நிறைய வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்”

“எனவே நான் இரண்டு டெஸ்ட் போட்டிக்கு இடைவெளியில் மெகா ஏலம் நடக்கும் என்று நினைத்தேன். ஆனால் இவர்கள் இப்படி ஒரு தேதியை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? என்று எனக்கு இப்பொழுது புரியவே இல்லை. போட்டி முடிந்த உடனேயே ஏலம் நடக்க ஆரம்பிக்கிறது. எனவே இதற்குப் பின்னால் ஒளிபரப்பு தொடர்பான விஷயங்கள் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அவர்கள் இதற்காக இப்படி செய்திருக்கிறார்கள்”

இதையும் படிங்க : எங்க மீடியா கோலியை கொண்டாடுறது வேடிக்கையா இருக்கு.. 5 போட்டியிலும் அவர விட மாட்டோம் – மிட்சல் மார்ஸ் பேட்டி

“நான் பெர்த் மைதானத்தின் முதல் போட்டியில் முதல் நாளில் இருக்கிறேன். அடுத்து ஐபிஎல் ஏலத்திற்கு ஜெட்டாவுக்கு செல்கிறேன். இரண்டு நாட்கள் ஏலத்தில் கலந்து கொள்கிறேன். ஏலம் எப்படி செல்கிறது என்பதை பொறுத்து, நான் பெர்த் டெஸ்டில் கடைசிக்கு வந்து சேர முடியும். இல்லையென்றால் இரண்டாவது டெஸ்டில் இணைந்து கொள்வேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -