டி20 உலகக் கோப்பை 2024

இந்திய அணியில் இணைந்ததும்.. ஹர்திக் பாண்டியா பார்முக்கு வந்தது இப்படிதான் – பவுலிங் கோச் வெளியிட்ட தகவல்

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங் பௌலிங் மற்றும் கேப்டன்சி என ஹர்திக் பாண்டியாவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் எல்லாமே பெரிய பிரச்சினையாக இருந்தது. இந்த நிலையில் நடப்பு டி20 உலகககோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா திரும்பி வந்திருக்கிறார். இதுகுறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மஹாம்ப்ரே பேசியிருக்கிறார்.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா 2024 17வது ஐபிஎல் சீசனில் மொத்தம் 14 போட்டிகளில் 11 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதில் அவர் ஒரு ஓவருக்கு 10.75 ரன்கள் கொடுத்தார். இதனால் அவரால் பந்துவீச்சில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்க முடியவில்லை.

இந்த நிலையில் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு அவர் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் தேர்வு செய்தது. இதற்கு அடுத்து அயர்லாந்து அணிக்கு எதிராக மூன்று விக்கெட் மற்றும் தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டு விக்கெட் என சிறப்பான முறையில் திரும்பி வந்திருக்கிறார்.

ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் எப்படி திரும்பி வந்தார் என்பது குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பேசியிருக்கிறார். இது குறித்து அவர் கூறும் பொழுது ” ஒரு விஷயத்தில் நான் உறுதியாக இருக்கிறேன், அது ஹர்திக் பாண்டியா தன்னுடைய திறமையில் நம்பிக்கை கொண்டவராக எப்பொழுதும் இருக்கிறார். சில நேரங்களில் நீங்கள் ரிதத்தில் இருக்க மாட்டீர்கள். அப்பொழுது நீங்கள் என்ன முயற்சி செய்தாலும் ரிதம் திரும்பவும் வராது. அது ரிதம் இல்லாத ஒரு காலகட்டம்.

- Advertisement -

நீங்கள் ஒரு வீரராக தொடர்ந்து பந்து வீசுகிறீர்கள், இன்னொரு பக்கத்தில் ரன்கள் அடிக்கிறீர்கள், இப்படி இருக்கும் பொழுது உங்களால் உங்களுடைய பந்துவீச்சு ரிதத்தை பராமரிக்க முடியாது. இதுதான் ஹர்திக் பாண்டியா ரிதத்தில் ஐபிஎல் தொடரில் இல்லாமல் போனதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : விதி விளையாடியது.. பரிதாபமாக டி20 உலக கோப்பையில் வெளியேறிய இலங்கை.. எல்லா கணிப்பும் பொய்யானது

அவர் தொடர்ந்து பந்துவீச்சில் வேலைகள் செய்து வந்தார். எனவே இந்தப் பணி நெறிமுறைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தால், நீங்கள் ஒரு கட்டத்தில் உங்களுடைய ரிதத்திற்கு திரும்ப வருவீர்கள். இது எல்லாமே ஒரு பந்துவீச்சாளரின் ரிதம் சம்பந்தப்பட்டதுதான். தற்பொழுது ஹர்திக் பாண்டியா அவருடைய பந்துவீச்சு ரிதத்தை திரும்ப பிடித்து விட்டார்” என்று கூறுகிறார்.

- Advertisement -
Published by

Recent Posts