“இந்திய பவுலர்கள் கிட்ட பொறாமையே இல்ல.. இலங்கை ஸ்கூல் பசங்க மாதிரி!” – அடிச்சு ஆடிய ரமீஷ் ராஜா!

0
10326
ICT

இந்திய அணி இலங்கை அணியை யாரும் எதிர்பார்க்காத விதத்தில் நேற்று ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் 50 ரன்கள் சுருட்டி அபார வெற்றி பெற்றது. இறுதிப் போட்டிக்கான எல்லா எதிர்பார்ப்புகளும், கொஞ்ச நேரத்தில் அடங்கியது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு போட்டி. அதேபோல் தான் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கும். ஆனால் அவர்களை மிகவும் காயப்படுத்திய ஒரு போட்டியாக அமைந்துவிட்டது.

- Advertisement -

இந்தப் போட்டியில் இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் சரியாக செயல்படவில்லையா? இந்திய பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டார்களா? என்று பல முன்னால் வீரர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த வகையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் ரமீஷ் ராஜா இலங்கை கிரிக்கெட் அணி குறித்து தன்னுடைய விமர்சனத்தை மிகவும் கடுமையாகவே வைத்திருக்கிறார். அதே சமயத்தில் இந்திய அணி குறித்து நல்ல முறையில் பாராட்ட செய்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“நிலைமை விளையாடுவதற்கு கடினமாகத்தான் இருந்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் அருமையாக செயல்பட்டார்கள். இலங்கை பேட்ஸ்மேன்கள் அபத்தமாக விளையாடினார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இதுபோன்ற ஒரு பந்துவீச்சை பார்த்தோம். இலங்கை பேட்டர்கள் தங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை. மேலும் அவர்கள் டிரெஸ்ஸிங் ரூமுக்கு செல்வதற்கு ஆர்வம் காட்டியது போலவே விளையாடினார்கள்.

- Advertisement -

இதைவிட அபத்தமான ஒரு இறுதிப் போட்டி இருக்கவே முடியாது. குறிப்பாக நவீன கிரிக்கெட்டில் நிலைமைகளையும் எதிரணி குறித்தும் வீரர்கள் மிக நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். மேலும் இலங்கை உள்நாட்டில் விளையாடியது.

சொந்த நாட்டில் இப்படி துரத்தி அடிப்பதை பார்க்க முடியவில்லை. அதுவும் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து ஒரு அணியை 50 ரன்கள் பற்றி கருத்துசொல்ல ஒன்றும் கிடையாது. இது ஹார்வர்ட் பல்கலைக்கழகம் கிண்டன்கார்டன் குழந்தைகள் பள்ளியோடு விளையாடியது போல இருந்தது.

இந்திய பந்துவீச்சாளர்கள் ஒருவருக்கொருவர் வெற்றியை அனுபவிக்கிறார்கள். அவர்களுக்குள் எந்த பொறாமையும் கிடையாது. சமீப காலங்களில் இந்தியா இறுதிப் போட்டிக்கு வராமல் போய்விட்டது. இந்த வெற்றி அவர்களது நம்பிக்கையை அதிகரித்திருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!