டாஸ் வென்று பவுலிங் எடுத்திருக்கக்கூடாது; அங்கேயே இந்திய அணியினர் பயத்துடன் இருக்கிறார்கள் என்று தெரிகிறது – முன்னாள் வீரர் கடும் விமர்சனம்!

0
403

ரோகித் சர்மா டாஸ் வென்று பவுலிங் எடுத்திருக்கக்கூடாது. அங்கேயே பேட்டிங்கில் பயத்தில் இருப்பது நன்றாக தெரிகிறது என கடுமையாக விமர்சித்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் பரூக் இன்ஜினியர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இரு அணிகளுக்கு இடையே இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

- Advertisement -

இங்கிலாந்து மைதானங்களில் டாஸ் வென்றால் பெருமளவில் முதலில் பேட்டிங் எடுப்பார்கள். கண்டிசனுக்கு ஏற்ப நன்றாக ஸ்கோர் வைத்துக்கொண்டு, பின்னர் பந்துவீச்சு அட்டாக் செய்வார்கள் என்கிற கருத்துக்கள் நிலவி வருகிறது. அதற்கேற்றார் போல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்யும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ரோகித் சர்மா டாஸ் வென்று வந்து வீச்சை தேர்வு செய்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. சிறப்பான பேட்டிங் லைன்-அப் வைத்துக்கொண்டு எதற்காக முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்கள் என்கிற கேள்விகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஃபரூக் இன்ஜினீயர், ரோகித் சர்மா டாஸ் வென்று பந்துவீச்சை எடுத்தது குறித்து கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

“ரோகித் சர்மா டாஸ் வென்று பவுலிங் செய்கிறோம் என்று அறிவித்தது எனக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது. இங்கு பிட்ச் பச்சையாக இருப்பதால் பேட்டிங் செய்வதற்கு தயக்கம் இருப்பதுபோல தெரிகிறது. அதனால் தான் பந்துவீச்சை எடுத்திருப்பார் என்று உணர்கிறேன். நம்மிடம் இருக்கும் பவுலிங் அட்டாக் சிறப்பாக இருந்தாலும், முதலில் பவுலிங் முடிவு தைரியமான முடிவு தான். ஆனால் புத்திசாலித்தனமான முடிவா? என்பதை பொறுத்திருந்துதான் காண வேண்டும்.

- Advertisement -

நம்மிடம் இருக்கும் புஜாரா கவுன்டி கிரிக்கெட் விளையாடி சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். விராட் கோலி மீண்டும் ஃபார்மிற்கு வந்துவிட்டார். சுப்மன் கில் இளம் வயதில் தனது கிரிக்கெட் வாழ்வின் சிறந்த பார்மில் இருக்கிறார். இப்படியொரு பேட்டிங் லைன்-அப் வைத்துக்கொண்டு சிறப்பான பேட்டிங் வெளிப்படுத்தி அட்டாக் செய்திருக்கலாம். அந்த வகையில் சிறு தவறு செய்துவிட்டார்களோ என்றும் உணர்கிறேன்.” என கருத்து தெரிவித்திருக்கிறார்.