36 ஆண்டுக்குப் பின் இந்திய பேட்ஸ்மேன்கள் மோசமான சாதனை ; ஆனால் கில் உலக சாதனை!

0
1463
ICT

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பைக்கு முன்பாக, இந்திய அணி டி20 வடிவத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பையில் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் தோற்று வெளியே வந்தது.

அந்தக் காலகட்டத்தில் அணிக்குத் தேவையான வீரர்களை கண்டறிவதற்காக கடைசி நேரம் வரை கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் முயற்சி செய்து கொண்டே இருந்தார்கள். ரவீந்திர ஜடேஜா மற்றும் பும்ராவின் காயம் வெகுவாக அணியை பாதித்தது.

- Advertisement -

தற்போது அதே சூழ்நிலை அப்படியே ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்பாக வந்திருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் ஆகியோர் காயத்தில் இருக்கிறார்கள். அடுத்து ஆசிய கோப்பை வர இருக்கிறது. இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெறுகிறது. இப்படி எல்லா விஷயங்களுமே ஒத்துப் போகிறது.

இப்பொழுதும் இந்திய அணி நிர்வாகம் தங்களுக்கான நான்காவது இடத்திற்கான பேட்ஸ்மேன் யார்? இரண்டாவது இடத்திற்கான விக்கெட் கீப்பர் யார்? என்பதற்கான தேடல்களை எதிர்பாராத வீரர்களின் காயங்களால் செய்து வருகிறது.

இதன் காரணமாக நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வளித்து, சஞ்சு சாம்சன் மற்றும் அக்சர் படேல் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

- Advertisement -

சஞ்சு சாம்சன் பேட்டிங்கில் மூன்றாவது இடத்தில் வர அக்சர் படேல் எதிர்பாராத விதமாக நான்காவது இடத்தில் அனுப்பப்பட்டார். ஐந்தாவது இடத்தில் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாடினார். திடீரென்று சூரியகுமார் யாதவ் கீழே தள்ளப்பட்டார். இவர்கள் மூவரும் நேற்று வரிசையாக 9, 1, 7 என ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்கள்.

36 ஆண்டுகளுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் மூன்று நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தின் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறுவது இதுவே முதல் முறை. இந்த வகையில் இந்த மூன்று வீரர்களும் சேர்ந்து இந்திய அணிக்காக இப்படி ஒரு மோசமான சாதனையை கொண்டு வந்திருக்கிறார்கள்.

அதே சமயத்தில் இந்தப் போட்டியில் இளம் வீரர் சுப்மன்கில் 49 பந்துகளில் 34 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸமின் உலகச் சாதனை ஒன்றை தகர்த்து இருக்கிறார். என்னவென்றால் முதல் 26 இன்னிங்ஸ்களில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் பாபர் ஆஸமை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்திருக்கிறார் சுப்மன் கில்.

முதல் 26 இன்னிங்ஸ்களில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த ஐந்து வீரர்கள்!

சுப்மன்கில் இந்தியா 1352 ரன்கள்.
பாபர் ஆஸம் பாகிஸ்தான் 1322 ரன்கள்.
ஜோனதன் ட்ராட் இங்கிலாந்து 1303 ரன்கள்.
பகார் ஜமான் பாகிஸ்தான் 1275 ரன்கள்.
ரசிவ் வாண்டர் டெசன் தென் ஆப்பிரிக்கா
1267 ரன்கள்.

நேற்றைய பரிசோதனை முயற்சிகள் ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்து இந்தியா இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனை அடுத்து தொடர் தற்பொழுது சமநிலைக்கு வந்திருக்கிறது.