பாபர் ஆஸமை பார்த்து எப்படி விளையாடுவது என்று இந்திய பேட்ஸ்மேன்கள் கத்துக்கனும் – நாசர் ஹுசைன் அதிரடியான பேச்சு!

0
512
Viratkohli

இரண்டாவது முறையாக தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை தவறவிட்டு இருக்கிறது!

இந்த இரண்டு முறையிலும் இந்திய அணியின் செயல்பாடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மிகவும் மோசமாக இருந்திருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியின் இந்த மோசமான செயல்பாடு இந்திய முன்னாள் வீரர்கள் இந்திய ரசிகர்களை தாண்டி மற்ற நாட்டு முன்னாள் வீரர்களையும் மிகவும் ஏமாற்றம் ஆக்கி இருக்கிறது.

மிகக்குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்திய அணியின் அணித் தேர்வில் இருந்து ஆட்ட வியூகம் வரை எல்லாமே தம்மை ஏமாற்றியதாகக் கூறியிருந்தார்.

முன்னாள் வீரர்களின் கருத்துகளுக்கு தகுந்த மாதிரிதான் இந்திய அணியின் வீரர்களின் செயல்பாடு இருந்தது. குறிப்பாக இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தங்களின் விக்கட்டுகளை தாமாக முன்வந்து தாரை வார்த்துவிட்டு சென்றார்கள்.

- Advertisement -

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற முறையில் பேட்டிங் ஒழுக்கத்தை கொஞ்சம் கூட பின்பற்றாமல் விளையாடினார்கள். ஆனால் இதற்கு நேர் எதிராக ஆஸ்திரேலிய பேட்மேன்கள் அவ்வளவு ஒழுக்கமாக விளையாடினார்கள்.

ரிக்கி பாண்டிங் போலவே தற்பொழுது இந்திய பேட்ஸ்மேன்களின் செயல்பாடு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் அவரையும் மிகவும் ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் ” இந்திய பேட்ஸ்மேன்கள் குறித்து நான் உண்மையில் மிகவும் ஏமாற்றம் அடைந்து விட்டேன். தற்போது நான் சொல்ல போகும் கருத்துக்காக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் என்னைப் பின்தொடர்ந்து விமர்சிக்கலாம்.

ஆனால் பந்தில் நல்ல இயக்கம் இருக்கும் பொழுது வேகப்பந்து வீச்சை எப்படி விளையாடுவது என்று பாகிஸ்தானின் பாபர் ஆஸம் மற்றும் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சனைப் பார்த்து இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்கள் பந்தை வரவிட்டு மிகவும் தாமதமாக விளையாடுவார்கள்!” என்று கூறியிருக்கிறார்!

இங்கிலாந்து முன்னாள் கேப்டனின் இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் நிச்சயம் அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது. இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் ரசிகர்கள் இவரின் இந்த கருத்துக்கு எதிர்வினை ஆற்றுகிறார்கள்.