ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னால் இந்திய பேட்ஸ்மேன்கள் இதை செய்திருக்க வேண்டும் – கம்பீர் திடீர் அதிரடி!

0
91
Gambhir

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தற்பொழுது இந்தியாவில் நடந்து வருகிறது!

இந்தத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு ஆஸ்திரேலியா தரப்பில் இந்திய ஆடுகளங்கள் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. நாக்பூரில் நடந்த முதல் போட்டிக்கான ஆடுகளத்தின் புகைப்படம் வெளியாக, அந்த ஆடுகளம் ஆஸ்திரேலியா இடதுகை பேட்ஸ்மேன்களை வைத்து தயாரிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி ஐசிசி இதில் தலையிட வேண்டும் என்று ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள் கொதித்தனர்!

- Advertisement -

இந்த நிலையில் நாக்பூர் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மோசமானதாக இல்லை என்பதை இந்திய வீரர்கள் முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் குவித்து நிரூபித்தார்கள். அதே சமயத்தில் ஆஸ்திரேலியா இரண்டு இன்னிங்ஸிலும் மோசமாக விளையாடி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

இதற்கடுத்து டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி மொத்தம் இரண்டரை நாட்கள்தான் நடைபெற்றது. இதில் முதல் இரண்டு நாட்கள் ஆஸ்திரேலியா அணி வசம்தான் அந்த டெஸ்ட் போட்டி இருந்தது. ஆனால் இந்திய பின் வரிசை ஆட்டக்காரர்கள் இடமும், பின்பு இந்திய சுழற் பந்துவீச்சாளர்களிடமும் இரண்டாவது இன்னிங்ஸில் விழுந்து ஆஸ்திரேலியா மோசமாய் தோற்றது. இந்த ஆடுகளம் குறித்தும் பெரிதான புகார்கள் ஏதுமில்லை.

இந்த நிலையில் மூன்றாவது போட்டிக்கு இந்தூரில் உருவாக்கப்பட்ட ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மோசமான ஆடுகளமாக இருந்தது. இந்தியா தொடரை கைப்பற்றி அத்தோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெறுவதற்காக விரித்த வலையில் தானே சிக்கி தோல்வியைத் தழுவியது. மேலும் இந்தத் தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறுவதும் ரன்கள் கொண்டுவர சிரமப்படுவதும் தொடர்கதையாக இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் இடது கை துவக்க ஆட்டக்காரர் கம்பீர் கூறும் பொழுது ” ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னால் இந்திய பேட்ஸ்மேன்கள் சில ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இந்தத் தொடருக்காக தயாராவதற்கு இப்படி எந்த முன்னேற்பாட்டையும் செய்யவில்லை. 20 நாட்கள் வலையில் பயிற்சி செய்வதை விட, பயிற்சிக்கான போட்டிகளில் விளையாடுவதுதான் நல்ல பலனை தரும்” என்று கூறியிருக்கிறார்!

மேலும் தொடர்ந்து இதைப்பற்றி பேசி உள்ள கம்பீர் ” ஆஸ்திரேலியா இங்கு வந்து பயிற்சி ஆட்டங்களில் விளையாடாத காரணத்தால் முதல் இரண்டு போட்டிகளில் தடுமாறியது. இது எதிர்மறையான மனநிலை. இது இந்திய பேட்டர்களுக்கும் பொருந்தும். ஒரு முக்கியமான தொடருக்கு முன்பு, சிவப்பு பந்தில் கிரிக்கெட் விளையாடுவது மிக மிக முக்கியம்” என்று தெரிவித்திருக்கிறார்!