இந்திய ஆல்ரவுண்டு வேகப்பந்துவீச்சாளர் டி20 உலகக்கோப்பையில் இருந்து விலகுகிறார்!

0
977
ICT

இந்த மாதம் ஆஸ்திரேலியாவில் துவங்க இருக்கும் டி20 உலக கோப்பை மற்றும் அடுத்த வருடம் இந்தியாவில் நடக்க இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை என இரண்டு உலகக் கோப்பைக்காக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் திட்டங்களுக்குக் கீழ் இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஒரு வருடமாக இயங்கி வருகிறது!

குறிப்பாகத் தற்போது நடக்க இருக்கும் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையை மனதில் வைத்தே அதிக பரிசோதனை முயற்சிகளும், புதிய வீரர்களுக்கான வாய்ப்புகளும், புதிய கலவைகளும் செய்யப்பட்டன.

- Advertisement -

ஆனால் ரவிந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ராவின் காயங்கள் டி20 உலகக் கோப்பைக்கான ஒட்டுமொத்த இந்திய அணி நிர்வாகத்தின் திட்டத்திலும் மிகப்பெரிய ஓட்டையைப் போட்டு விட்டது.

இரண்டு வீரர்கள் டி20 உலக கோப்பை இந்திய அணியில் இருந்து வெளியேற, மொத்தமாகப் புதியதொரு திட்டத்தையும் அதற்கான புதிய வீரர்களையும் உடனுக்குடன் அணிக்குள் கொண்டு வந்து அவர்களைத் தயார் படுத்த வேண்டிய நெருக்கடி உருவாகியிருக்கிறது. இதில் மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால், விலகிய இரு வீரர்களும் தனித்துவமான வீரர்கள் என்பதால் இவர்களுக்கான சரியான மாற்று வீரர்கள் இல்லை என்பதுதான்!

இந்த நிலையில் உலக கோப்பைக்கான ரிசர்வ் வீரராக அறிவிக்கப்பட்டிருந்த தீபக் சஹர், காயத்தில் இருந்து திரும்பி வந்த பொழுது நல்ல பந்து வீச்சு நிலையில் இருந்தார். மேலும் சிறப்பாக பேட்டிங் செய்யக்கூடியவர். இதனால் பும்ராவுக்கு பதிலாக இவர் இந்திய அணியில் இடம் பெறவும் ஒரு வாய்ப்பு இருந்தது. மேலும் இவர் புவனேஷ்வர் குமாருக்கு காயம் என்றால் சரியான மாற்று வீரராக இருக்கக் கூடியவர்.

- Advertisement -

ஆனால் இவருக்கு தென்ஆப்பிரிக்க அணியுடனான ஒருநாள் தொடருக்கு முன்பாக கணுக்கால் காயம் ஏற்பட்டது. இந்தக் காயம் பெரிய கவலைக்குரியது இல்லை, இந்திய அணி நிர்வாகத்திற்கு இவர் தேவைப்பட்டால் இவரை ஆஸ்திரேலியா தாராளமாக அழைத்துக் கொள்ளலாம் என்று அப்போது கூறப்பட்டது.

ஆனால் இப்பொழுது இவர் காயத்தால் டி20 உலகக்கோப்பை இந்திய அணியோடு இணைய முடியாது என்ற அதிர்ச்சி தகவல் வந்திருக்கிறது. இவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் இடம்பெறலாம் என்று பேசப்படுகிறது. நாளை அல்லது மறுநாள் முகமது சமி, முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர் மூவரும் ஆஸ்திரேலியா செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -