இங்கிலாந்து லயன்சை வீழ்த்தியது இந்திய ஏ அணி.. ஸ்ரேயாஸ் நீக்கப்பட்டால் யாருக்கு வாய்ப்பு?

0
157
Sai

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணி இந்திய ஏ அணிக்கு எதிராக அதிகாரப்பூர்வமற்ற நான்கு நாட்கள் கொண்ட மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி முடித்திருக்கிறது.

இந்தத் தொடரில் ஒரு போட்டி டிரா ஆக, ஒரு போட்டியை வென்று இந்தியா முன்னணியில் இருந்தது. இந்த நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பாக குஜராத் அகமதாபாத் மைதானத்தில் மூன்றாவது போட்டி தொடங்கியது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை இங்கிலாந்து லயன்ஸ் அணி தேர்வு செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 192 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது.

இதற்கு அடுத்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி 199 ரன்கள் எடுத்து ஏழு ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது. இந்திய அணியின் பந்துவீச்சில் ஆகாஷ் தீப் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய இந்திய ஏ அணிக்கு சாய் சுதர்ஷன் மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடிக்க, இந்திய ஏ 409 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதையடுத்து 403 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி நேற்று 83 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இன்று தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி 268 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில் சாம்ஸ் முலானி ஐந்து விக்கெட் கைப்பற்றினார். இந்திய அணி 138 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என வென்றது.

இதையும் படிங்க : அஸ்வின் பற்றி பீட்டர்சன் விமர்சனம்.. தினேஷ் கார்த்திக் தந்த பதிலடி.. சுவாரசிய சம்பவம்

சமீப காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக கில் மற்றும் ஸ்ரேயாஸ் பேட்டிங்கில் சொதப்பி வந்தார்கள். ஆனால் இன்று இங்கிலாந்துக்கு எதிராக கில் சதம் அடித்த தப்பித்து விட்டார். ஆனால் இந்த முறையும் தனக்கு கிடைத்த வாய்ப்பை ஸ்ரேயாஸ் நடித்திருக்கிறார். எனவே சிறப்பாக விளையாடி வரும் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா? என்கின்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.