இந்திய நண்பர்கள் என்னை கேலி செய்றாங்க.. ஆஸ்திரேலியா அணி அந்த அளவுக்கு மோசமாயிடுச்சு – ரிக்கி பாண்டிங் வருத்தம்

0
12
Ricky

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் நண்பர்கள் தன்னை கேலி செய்யும் அளவுக்கு ஆஸ்திரேலியா அணி மிகவும் மோசமாக விளையாடி உள்ளதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணி முதலில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராகவும் அடுத்து இலங்கை அணிக்கு எதிராகவும் தோல்வி அடைந்து முதல் சுற்றோடு தொடரி விட்டு வெளியேறி இருக்கிறது. ஆஸ்திரேலியா அணி இப்படி வெளியேறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கேலி செய்கிறார்கள்

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் பேசும்பொழுது ” இது ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் மோசமான உலகக்கோப்பையாக அமைந்திருக்கிறது. முதலில் அவர்களுக்கு ஹேசில்வுட் கிடைக்கவில்லை. அடுத்து கம்மின்ஸ் காயம் காரணமாக விலகினார். ஆனால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் டிம் டேவிட் அவர்களுக்கு கிடைத்துவிட்டார். அந்த போட்டியில் தோல்வியடைந்த காரணத்தினால்தான் இந்த முடிவு உண்டாகி இருக்கிறது. எனவே அது குறித்து ஆஸ்திரேலியா அணி நினைத்துப் பார்க்கும்”

“கடந்த சில நாட்களாக என்னுடைய இந்திய நண்பர்களிடமிருந்து நான் கேலி கிண்டல்களை சந்தித்தேன். ஆனால் இது விளையாட்டில் ஒரு பகுதிதான். இதில் நல்லது கெட்டது இரண்டையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் நான் தான் அவர்களுக்கு திரும்பத் திரும்ப கிண்டல் மெசேஜ்களை அனுப்பக்கூடியவனாக இருந்திருக்கிறேன். ஆனால் இந்தத் தொடரில் அப்படி நடக்கவில்லை”

- Advertisement -

அந்த ஆரா இல்லை

“நான் உங்களிடம் சில நாட்களுக்கு முன்பு சொல்லி இருப்பேன். உலகக் கோப்பை மாதிரியான பெரிய தொடர்களில் விளையாடுவதற்கான ஆராவை இந்த அணியில் நான் பார்க்கவில்லை. இப்படிப்பட்ட தொடர்களில் வெல்ல வேண்டும் என்றால் உங்கள் அணியில் உள்ள அனுபவ வீரர்கள் முக்கியமான நேரங்களில் எழுந்து நிற்க வேண்டும்”

இதையும் படிங்க : ஐசிசி ரேங்கிங்.. பிரித்து எடுத்த இஷான் கிஷான்.. அதிவேக உயரம்.. 4 இந்திய வீரர்கள் ஆதிக்கம் – புதிய அப்டேட்

“சின்ன சின்ன தருணங்கள் போட்டியில் இருக்கும். அவற்றை எல்லாம் வெல்ல வேண்டும். ஆனால் இந்த ஆஸ்திரேலியா அதை செய்ய முடியவில்லை. மேலும் முன்னாள் வீரர்களான நாங்கள் இருக்கும் வாட்ஸ் அப் குழுக்களில் எங்கள் வீரர்களின் மோசமான செயல்பாடு பற்றி நாங்கள் திட்டுவதில்லை. மாறாக எங்களுடைய அணி நன்றாக விளையாட வேண்டும் என்று நினைக்கிறோம்” எனக்கூறி இருக்கிறார்.

- Advertisement -