17வது முறை.. சாதனை படைத்த இந்திய அணி.. பாண்டியா ராணா அசத்தல்.. ஹாரி ப்ரூக் அதிரடி வீண் இங்கி 4வது டி20

0
1631

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டி புனேவில் நடைபெற்றது.

இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா அதிரடி

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில், இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் பண்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய சஞ்சு சாம்சன் 1 ரன்னில் வெளியேற, அவரைத் தொடர்ந்து வந்த திலாக் வர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார்கள்.

மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா 19 பந்துகளில் 29 ரன்கள் குவிக்க, மிடில் வரிசையில் களமிறங்கிய ரிங்கு சிங் 26 பந்துகளை எதிர்கொண்டு 30 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு சிவம் துபே உடன் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா கூட்டணி 45 பந்துகளில் 87 ரன்கள் குவித்தது. இதில் அதிரடியாக விளையாடிய ஹர்த்திக் பாண்டியா 30 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸ் என 53 ரன்கள் குவித்தார். மறுமுனையில் சிவம் துபே 34 பந்துகளில் 53 ரன்கள் குவிக்க, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இந்திய அணி சாதனை வெற்றி

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களம் இறங்கியது. இதில் இங்கிலாந்து அணியின் சால்ட் மற்றும் பென் டக்கட் ஜோடி முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி ஆறு ஓவர்களில் 62 ரன்கள் குவித்தது. இதில் சால்ட் 23 ரன்னில் அக்சார் பட்டேல் பந்துவீச்சில் வெளியேற மறுமுனையில் டக்கெட் 19 பந்துகளில் அதிரடியாக விளையாடி 39 ரன்கள் குவித்து வெளியேறினார். அதற்குப் பிறகு களம் இறங்கிய கேப்டன் பட்லர் 2 ரன்னில் ரவி பிஷ்ணாயின் பந்துவீச்சில் வெளியேறினார்.

இதையும் படிங்க:இறுதியாக அறிவிக்கப்பட்ட பாக் அணி.. 2 ஸ்டார் வீரர்கள் விலகல்.. 1 முக்கிய மாற்றம்.. சாம்பியன்ஸ் டிராபி தொடர்

கடந்த இரண்டு போட்டிகளில் தடுமாறிய ஹாரி புரூக் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 26 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸ் என 51 ரன்கள் குவித்த நிலையில் வருண் சக்கரவர்த்தி அவரை வீழ்த்தினார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய லிவிங்ஸ்டன் 9 ரன் மற்றும் ஜேக்கப் பெத்தல் 6 ரன் ஆகியோரை சிவம் துபெவுக்கு பதிலாக மாற்று வீரராக களம் இறங்கிய ஹர்சித்ராணா வீழ்த்தினார். இவர்கள் இருவரது விக்கெட்டை வீழ்த்தியதும் வெற்றிப் பாதையில் இருந்த இங்கிலாந்து அணி தோல்வி நிலைக்கு செல்ல இறுதியாக 19.4 ஓவரில் 166 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைய இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. 2019ஆம் ஆண்டு முதல் இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ந்து 17வது முறையாக டி20 தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.

- Advertisement -